Tue. Jul 7th, 2026 18:00:40
பிரதான செய்தி

அமெரிக்கா மீண்டும் தாக்குதலுக்கு தயாரா? மேற்கு வான்வெளியை மூடிய ஈரான்!

admin - May 24, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா புதிய ராணுவ நடவடிக்கைகளுக்கு தயாராகி வருவதாக வெளியாகும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதன் பின்னணியில், ஈரான் தனது நாட்டின் மேற்குப் பகுதி வான்வெளியை தற்காலிகமாக மூடுவதாக அவசர அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஈரானின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் வெளியிட்டுள்ள NOTAM அறிவிப்பின் படி, மேற்கு வான் எல்லை வழியாகச் செல்லும் அனைத்து பயணிகள் விமானங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது வார இறுதி பயணங்களை ரத்து செய்து, வெள்ளை மாளிகையிலேயே தங்கியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், “Operation Sledgehammer” என்ற பெயரில் ஈரானுக்கு எதிரான மிகப்பெரிய வான்வழித் தாக்குதலுக்கான இறுதிக்கட்ட ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.