September 5, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > வித்தியா கொலை வழக்கு தண்டனை கைதி உயிரிழப்பு

வித்தியா கொலை வழக்கு தண்டனை கைதி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கொன்றிற்காக யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில், அங்குள்ள சிறைச்சாலையில் வைத்து அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

46 வயதுடைய பூபாலசிங்கம் ஜெயகுமார் என்ற மரண தண்டனை கைதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.