Tue. Jul 7th, 2026 18:00:17
இலங்கை

பழைய முறையிலேயே மாகாண சபைத் தேர்தல் நடத்த வேண்டும்: 42 கட்சிகளும் சிவில் அமைப்புகளும் ஒருமித்த கோரிக்கை

admin - May 26, 2026

மாகாண சபைத் தேர்தலை பழைய முறையிலேயே நடத்த வேண்டும் என வலியுறுத்தி, கொழும்பில் 42 அரசியல் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

இது தொடர்பான கலந்துரையாடலில் தேர்தல் முறை மாற்றம் மேலும் தாமதத்தை ஏற்படுத்தும் என்பதால், பழைய விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்கள் கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்படாத நிலையில், தேர்தல் முறைமை மற்றும் எல்லை நிர்ணய பிரச்சினைகள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.