Tue. Jul 7th, 2026 18:00:29
கல்முனை

பாண்டிருப்பு மகாவித்தியாலய நுழைவாயில் வரவேற்பு பலகை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

admin - May 29, 2026

பாண்டிருப்பு மகாவித்தியாலயத்தின் 2006 ஆம் ஆண்டு GCE O/L பழைய மாணவர்களின் நிதிப்பங்களிப்பில் பாடசாலையின் நுழைவாயிலில் புதிய வரவேற்பு பலகை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

பாடசாலையின் அழகியமைப்பையும் அடையாளப் பெருமையையும் மேம்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு நிதியுதவியையும் 2006 ஆம் ஆண்டு பழைய மாணவர்கள் வழங்கியுள்ளனர்.

அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் அழைக்கப்பட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வு பழைய மாணவர்களின் பாடசாலை மீதான பற்றுறுதியையும் சமூகப் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்துவதாக பலரும் பாராட்டுத் தெரிவித்தனர்.