Tue. Jul 7th, 2026 18:00:46
இலங்கை

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (E.P.R.L.F) 36 ஆவது தியாகிகள் தின நிகழ்வு!

admin - June 20, 2026

-செல்லையா பேரின்பராஜா-

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (E.P.R.L.F) 36 ஆவது தியாகிகள் தினம் 20.06.2026 சனிக்கிழமை மட்டக்களப்பு அலுவலகத்தில் இம் முன்னணியின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெத்தினம் தலைமையில் இடம்பெற்றது.

முன்னதாக தோழர் பத்மநாபாவின் உருப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அகல் விளக்கேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா தோழர் விமலன் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.