Tue. Jul 7th, 2026 18:00:25
இலங்கை

ஹரக் கட்டா’ இலஞ்ச வழக்கு: மூவர் ஜூலை 3 வரை விளக்கமறியலில்!

admin - June 27, 2026

பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினரான ‘ஹரக் கட்டா’வை பூஸ்ஸ சிறையிலிருந்து மாற்றுவதற்காக 120 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ, ஹொரண தொகுதி சஜப அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்றும் அருண் ஸ்ரீ சதுரங்க ஆகிய மூவரையும் எதிர்வரும் ஜூலை 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர்களில் இருவருக்கு கடுமையான உடல்நலக் குறைபாடுகள் இருப்பதாக அவர்களின் சட்டத்தரணிகள் தெரிவித்து பிணை கோரியிருந்த போதிலும், அந்தக் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.