Tue. Jul 7th, 2026 18:00:01
கல்முனை

கல்முனை வடக்கு பிரதேச செயலக ஆனி மாத பௌர்ணமி கலை விழாநேற்று சிறப்பாக நடைபெற்றது!

admin - July 1, 2026

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த ஆனி மாத பௌர்ணமி கலை விழா – 2026 நேற்று (30.06.2026) செவ்வாய்க்கிழமை பெரியநீலாவணையில் அமைந்துள்ள கலை கலாசார மேம்பாட்டு மையத்தில் பிரதேச செயலாளர் திரு. ரி.ஜே. அதிசயராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாரம்பரிய மற்றும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. அதன்படி தமிழ் மொழி வாழ்த்து ,வரவேற்பு நடனம், பரதநாட்டியம் ,மயில் நடனம், பரதக் கலைநிகழ்ச்சிகள், குழு நடனம், பாடல்கள் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நடனங்களை நடன பாட ஆசிரிய ஆலோசகர் திருமதி நிரஞ்சனா தயாபரன், ஓய்வு பெறற ஆசிரியர் நிர்மலா தம்பிராஜா ஆகியோரின் நெறிப்படுத்தியிருந்தனர்.

;.

கலை ,பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கில் இந் நிகழ்வு கல்முனை வடக்கு பிரதேசத்தில் மாதாந்தம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலக ஊழியர்கள் ,எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மைய செயலாளர் கா.சாந்தகுமார் ,பெரியநீலாவணை தமிழர் கலாசார அபிவிருத்தி மன்றத்தின் செயலாளர் என்.சௌவியதாசன் ,பொருளார் நா.மகேஸ்வரன், வடக்கு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் நகுலாதேவி உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்சித் தொகுப்பு திரு.வி.கார்த்திக் திரு.ஆர் நிஜந்தன்