Tue. Jul 7th, 2026 18:00:50
இலங்கை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதல் தீவிரம் – இராணுவம் குவிப்பு, 25 பேர் பலி

admin - July 6, 2026

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்டுள்ள கடும் பதற்ற நிலை காரணமாக இதுவரை மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களில் 5 சிறைச்சாலை அதிகாரிகளும், 20 கைதிகளும் அடங்குவதாக நீர்கொழும்பு மருத்துவமனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறைச்சாலையில் இன்று ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, மேலதிக பாதுகாப்பிற்காக இலங்கை இராணுவத்தினர் நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.