September 5, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > 46 ஆயிரம்  தமிழ்ப் பெயர்கள் அடங்கிய “தமிழ்ப்பெயர்த் தொகுப்பு (46000)” நூல் வெளியீட்டு விழா மட்டக்களப்பில் -10.05.2026

46 ஆயிரம்  தமிழ்ப் பெயர்கள் அடங்கிய “தமிழ்ப்பெயர்த் தொகுப்பு (46000)” நூல் வெளியீட்டு விழா மட்டக்களப்பில் -10.05.2026

( வி.ரி. சகாதேவராஜா)

தமிழமுதம் வெளியிடும் 46 ஆயிரம்  தமிழ்ப் பெயர்கள் அடங்கிய “தமிழ்ப்பெயர்த் தொகுப்பு (46000)” நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு  தமிழ்ச்சங்கம் மற்றும் திருகோணமலை கல்முனை தமிழ்ச்சங்கங்களின் ஒருங்கிணைப்பில் குறித்த தமிழ்ப்பெயர்த் தொகுப்பு (46000)” எனும் முக்கிய நூல் வெளியீட்டு நிகழ்வு  10.05.2026 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணிக்கு

மட்டக்களப்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெற உள்ளது.

மட்டக்களப்பு தமிழ் சங்க தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவில், பிரதம அதிதியாக  மட்டக்களப்பு மாநகர சபை  முதல்வர் சிவம் பாக்கியநாதன் கலந்து சிறப்பிக்க உள்ளார்.

முன்னிலை அதிதியாக

கிழக்கு பல்கலைக்கழக தமிழ்க் கற்கைகள் துறை கலை கலாசார பீடத் தலைவர் திருமதி விஜிதா திவாகரன்  பங்கேற்கிறார்.

சிறப்பு விருந்தினர்களாக

ஓய்வுநிலை தமிழ் மொழி உதவிக் கல்விப் பணிப்பாளர் த.யுவராஜன்,   ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர், சிரேஷ்ட ஊடகவியலாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா  ஆகியோர் கலந்து சிறப்பிக்கஉள்ளனர்.

இந்த நிகழ்வில் சுலக்ஷினி புவனேந்திரராஜா தமிழ் மொழி வாழ்த்து பா பாட , வரவேற்புரையை மட்டக்களப்பு தமிழ் சங்க செயலாளர் சட்டத்தரணி மு. கனேசராசா வழங்குகிறார்.

சிறப்புரைகளை திருகோணமலை தமிழ் சங்க தலைவர் திருமலை நவம் மற்றும் கல்முனை தமிழ் சங்க தலைவர் சஞ்சீவி சிவகுமார் ஆகியோர் வழங்குகின்றனர்.

 நிகழ்வில் வெளியீட்டு உரையை தமிழமுதம் தலைவர் சொ. வெற்றியரசன்,

நூல் நயவுரையை தேசிய கல்வி நிறுவக தமிழ் மொழித்துறைப் பணிப்பாளர் கலாநிதி முருகு தயாநிதி ஆகியோர் நிகழ்த்துகின்றனர்.

வாழ்த்துக்கவியை கதிரவன் க. இன்பராசா வழங்குகிறார். ஏற்புரையை க.கனகசிங்கம் வழங்க நன்றியுரையை  ச. கணேசமூர்த்தி வழங்கவுள்ளார்.