September 5, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > சைவ பண்டிதர், இளஞ்சைவ பண்டிதர் பட்டமளிப்பு மட்டக்களப்பில் நடைபெற்றது.

சைவ பண்டிதர், இளஞ்சைவ பண்டிதர் பட்டமளிப்பு மட்டக்களப்பில் நடைபெற்றது.

கே.எஸ். கிலசன்

மட்டக்களப்பு சைவத்தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில்
சைவ பண்டிதர், இளஞ்சைவ பண்டிதர் பட்டமளிப்பு விழா இன்றையதினம் மட்டக்களப்பு தமிழ் சங்க மண்ணபத்தில் நடைபெற்றது.

சைவத்தமிழ் மன்றத்தின் தலைவர் சைவப்புலவர், சைவபண்டிதர் பேராசிரியர் தி. சதானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருமுன்னிலை அதிதியாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு. சச்சிதானந்தமூர்த்தி குருக்கள் அவர்களும், முன்னிலை அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட இந்துநாகரீகத்துறை பேராசிரியர் வ.குணபாலசிங்கம் மற்றும் இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தின் தமிழ்மொழித்துறை பணிப்பாளர் கலாநிதி முருகு. தயாநிதி ஆகியோரும் விசேட அதிதியாக மட்டக்களப்பு தமிழ்சங்கத்தின் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி அவர்களும் சைவ பண்ணிதர்கள், இளஞ்சைவ பண்டிதர்கள் சைவத்தமிழ் உணர்வாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

கடந்த வருடம் பரீட்சைக்கு தோற்றிய 300கு மேற்பட்ட பரீட்சார்த்திகளில் பரீட்சையில் சித்தியடைந்த தகுதியான இருவருக்கு சைவ பண்டிதர் பட்டமும், 22 பேருக்கு இளஞ்சைவ பண்டிதர் பட்டமும் வழங்கிவைக்கப்பட்டது.