Tue. Jul 7th, 2026 16:46:58
இலங்கை

தேசிய ரீதியில் சாதனைபடைத்த மட்டக்களப்பு வலய பாடசாலை மாணவர்களுக்கு கௌரவிப்பு

admin - May 19, 2026

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இருந்து, தேசிய ரீதியில் நடைபெற்ற சமூக விஞ்ஞானப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்று, பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்ட மாணவர்களைக் கௌரவிக்கும் வைபவம் வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.

வலயக் கல்வி அலுவலகப் பணியாளர் திரு. த. ரவி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், போட்டித் தொடரில் சாதனை படைத்த மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வலயக் கல்வி அலுவலகப் பிரதிப் பணிப்பாளர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள், வலய உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

தேசிய மட்டத்தில் சாதனை படைத்து, மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குப் பெருமை சேர்த்த பாடசாலைகளின் விபரம் பின்வருமாறு:

மட்டக்களப்பு வின்சென்ட் உயர்தர மகளிர் பாடசாலை

புனித சிசிலியா மகளிர் மகா வித்தியாலயம்

மெதடிஸ்த மத்திய கல்லூரி

புனித மைக்கேல் கல்லூரி

புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயம்

கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி

தேசிய மட்டத்தில் வெற்றிபெற்ற அனைத்து மாணவச் செல்வங்களும் இதன்போது பாராட்டுப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.