September 5, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > பாண்டிருப்பு மகா வித்தியாலய நலன்புரி அமைப்பு அங்குரார்ப்பணம்

பாண்டிருப்பு மகா வித்தியாலய நலன்புரி அமைப்பு அங்குரார்ப்பணம்

கல்முனை கல்வி வலயத்தின் கமு/கமு/ பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தின் பாடசாலைக்கான நலன்புரி அமைப்பு பாண்டிருப்பு பொதுமக்கள். சமூகபற்றாளர்கள், புத்திஜீவிகள், இணைந்து உருவாக்கி இன்று அதனுடைய அங்குரார்ப்பண நிகழ்வு பாடசாலையில் நடைபெற்றது.

பாடசாலை நலனிலும் ஊர் நலனிலும் அக்கறை கொண்ட பாண்டிருப்பு மண்ணைச் சேர்ந்தவர்களால் கடந்தவாரம் உருவாக்கப்பட்டது. இவ் நலன்புரி அமைப்பின் தலைவராக தாமோதரம் பிரதீவன் அவர்களும் செயலாளராக திருமதி கோபிகா சுரேஸ் அவர்களும் பொருலாளராக R.லவன் அவார்களும் போஷகராக பாடசாலை அதிபர் அருண்குமார் அவர்களும்,ஆலோசகர்களாக ஓய்வு பெற்ற அதிபர் இ.இராஜரெட்ணம், ஆசிரிய ஆலோசகர் மா.லக்குணம் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்ட நிலையில் அதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (03) காலை பாடசாலையில் அமைப்பின் தலைவர் தலமையில் இடம்பெற்றது.

நிகழ்வுகள் மங்கல விளக்கேற்றல். இறைவணக்கம், பாடசாலை கீதம் என்பவற்றோடு ஆரம்பமாகி பாடசாலை ஆசிரியை திருமதி R.நிலந்தினி அவர்களின் வரவேற்புரையோடு பாடசாலை அதிபர் அருண்குமார் அவர்களின் தலைமை உரையுடனும் அமைப்பின் தலைவர் தா.பிரதீபன் அவர்கள் ஆலோசகர்கள் இ.இராஜரெட்ணம்.மா.லக்குணம் ஆகியோரின் விஷேட உரைகளுடனும், பாடசாலையின் சார்பிலே ஆசிரியர் ஐங்கரன் அவர்கள் நன்றி உரையும் அமைப்பின் சார்பிலே செயலாளர் திருமதி கோபிகா அவர்களின் நன்றியுடனும் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றிருந்தது.

இந்நிகழ்வில் பேசியவர்கள் பாடசாலையின் எதிர்கால கல்வி நடவடிக்கைகள், இணைப்பாட விதான செயற்பாடுகள், ஒழுக்க கட்டுப்பாடுகள் போன்றவைகள் தொடர்பிலே அதிக கவனம் செலுத்தப்பட்டு பாடசாலையின் நற்பெயரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது தொடர்பிலும் பேசியதோடு பல்வேறு திட்டங்களும் முன்வழியப்பட்டிருந்ததோடு விரைவிலே இந்த திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு இந்த பாடசாலை இந்த வலயத்திலே நல்ல ஒரு இடத்தை தக்க வைக்கின்ற அளவிற்கு முன்னேற்றகரமான செயற்பாடுகள் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.