Tue. Jul 7th, 2026 16:42:24

Author: admin

இலங்கை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதல் தீவிரம் – இராணுவம் குவிப்பு, 25 பேர் பலி

July 6, 2026

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்டுள்ள கடும் பதற்ற நிலை காரணமாக இதுவரை மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் 5 சிறைச்சாலை அதிகாரிகளும், 20 கைதிகளும் அடங்குவதாக நீர்கொழும்பு மருத்துவமனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறைச்சாலையில் இன்று ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, மேலதிக பாதுகாப்பிற்காக இலங்கை இராணுவத்தினர் நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கல்முனை

உகந்தை முருகனாலயத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலக ஊழியர்களின் சிரமதானப் பணி!

July 6, 2026

வரலாற்றுச் சிறப்புமிக்க உகந்தை முருகனாலயத்தில், நேற்று (05.07.2026) கல்முனை வடக்கு பிரதேச செயலக ஊழியர்களால் ஆலய வளாகத்தில் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது. வருடாந்தம் கதிர்காம பாதயாத்திரை மற்றும் ஆலய உற்சவத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இவ்வாலயத்திற்கு வருகை தருவதால், அவர்களின் வசதியை கருத்தில் கொண்டு ஆலயச் சூழலை தூய்மைப்படுத்தும் நோக்கில் இச்சிரமதானப் பணி மேற்கொள்ளப்பட்டது. கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்வில், சிரமதானப் பணியுடன் பக்தர்களுக்கான அன்னதான […]

இலங்கை

நாவிதன்வெளி ஸ்ரீ கற்பக விநாயகர் புகழ்பாடும் ‘தெய்வீக கானங்கள்’ இசைத்தட்டு வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது!

July 6, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளியைப் பூர்வீகமாகவும், பாண்டிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞர் விவேகவெளி தமிழேந்திரன் (சரவணமுத்து நவேந்திரன்) இயற்றிய ‘தெய்வீக கானங்கள்’ எனும் பக்தி இசைத்தட்டின் வெளியீட்டு விழா, நாவிதன்வெளி ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வளாகத்தில் ஆசிரியர் ஆலோசகர் எம். லக்குணன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ கன. மாதவராஜா அவர்களின் ஆசீர்வாதத்துடன் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, இசைத்தட்டு வெளியீட்டு நிகழ்வு இடம் பெற்றது. இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் […]

இலங்கை

இடமாற்றம் பெற்று சென்ற முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தருக்கு கௌரவிப்பு

July 6, 2026

(செல்வி வினாயகமூர்த்தி) ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தராகப் பணியாற்றி, கடந்த மாதம் இடமாற்றம் பெற்று சென்ற ஜனாப் எஸ். எம். அபுல்காசிம் அவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு, ஆலையடிவேம்பு சிரேஷ்ட பிரஜைகள் சங்கங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று (05) ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்று 7/4 , RDS கட்டிடத்தில் நடைபெற்றது. நிகழ்வில், மூத்த பிரஜைகளும் இந்து இளைஞர் மன்றத் தலைவருமான த. கைலாயபிள்ளை மற்றும் வே. சந்திசேகரம் ஆகியோர் ஜனாப் எஸ். […]

இலங்கை

பொன் அணிகளின் சமரில் சிவானந்தா வெற்றிவாகை! 31 வருட போட்டிகளில் 16 சிவானந்தா; 15 இந்து!!

July 5, 2026

(  வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாணத்தின் முன்னணி பாடசாலைகளான திருகோணமலை ஶ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரிக்கும் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்திற்கும் இடையிலான 31 வது வருட பொன் அணிகளின் சமர் ( Battle of the Gold) கிரிக்கெட் போட்டியில் சிவானந்தா அணி வெற்றிவாகை சூடி இந்த ஆண்டுக்கான சாம்பியன் பொன் கிண்ணத்தை தட்டிக் கொண்டது. இப் போட்டி திருகோணமலை ஶ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று (4) சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. திருமலை கோணேஸ்வரா […]

இலங்கை

சாய்ந்தமருது பிரதான வீதியில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது-மங்காத்தா திரைப்பட பாணியில் அதிரடி காட்டிய  பொலிஸ் பரிசோதகர்

July 5, 2026

பாறுக் ஷிஹான் கார் ஒன்றில் போதைப்பொருட்களை கடத்திச் சென்றவர்களை துரத்தி சென்று பிடித்த சம்பவம் மக்கள் மத்தியில் பாராட்டினை பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக இச்சம்பவம் சனிக்கிழமை (4) இடம்பெற்றது. குறித்த சோதனை நடவடிக்கையின் போது 32 ,33, 34 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் ஹெரோயின் போதைப்பொருள் 15 கிராம் 370 மில்லி கிராம் உட்பட  சொகுசு கார், மோட்டார் […]

இலங்கை

டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் வெறுப்புப் பேச்சுக்களைக் கையாளுதல் குறித்து அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

July 5, 2026

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் வெறுப்புப் பேச்சுக்களைக் கையாளுதல் குறித்த விசேட செயலமர்வு இன்று காலை அக்கரைப்பற்று மாநகர சபை மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ​”சமூக நல்லிணக்கத்திற்கான பொறுப்புள்ள டிஜிட்டல் சமூகம் – கட்டம் 2″ (Responsible Digital Society for Social Cohesion- Phase 2) எனும் செயற்திட்டத்தின் கீழ் இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ​சர்வோதயம் அமைப்பு, யுனிசெப் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இந் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. […]

இலங்கை

அக்கரைப்பற்று CDFF கிளையினால் கதிராகாம பாதயாத்தியர்களுக்கு ஒரு தொகை மருந்து பொருட்கள் வழங்கி வைப்பு.

July 5, 2026

வடிவேல் டினேஸ் எதிர்வரும் 10 ஆம் திகதி உகந்தை காட்டுப் பாதை ஊடாக கதிர்காமம் ஆலயம் நோக்கி பாதயாத்திரை மேற் கொள்ளும் அடியவர்கள் தற்போது தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் கடந்த மே மாதம் யாழ் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ப்தயாத்திரை மேற் கொண்ட குழுவினர் தற்போது அம்பாறை மாவட்டத்தை வந்தடைந்துள்ளனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பாதயாத்திரை அடியார்கள் இதில் உள்ளடங்குகின்றனர். இவர்கள் தற்போது அம்பாறை […]

Uncategorized

கல்முனை வைத்தியசாலைக்கு ரூ. 7 கோடி பெறுமதி அதிநவீன ஆர்த்ரோஸ்கோபி கருவி வழங்கப்பட்டது

July 4, 2026

பிராந்திய மக்களுக்கு வரப்பிரசாதம் என்கிறார் வைத்திய நிபுணர் கலாநிதிவேந்தன் (வி.ரி. சகாதேவராஜா) கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு 68 மில்லியன் (6.8 கோடி) ரூபா பெறுமதியான அதிநவீன ஆர்த்ரோஸ்கோபி கருவி வழங்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன தலைமையில் அங்கு விஜயம் செய்தபோது, ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன் மற்றும் எலும்பு முறிவு சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் மருத்துவர் பி. கலாநிதிவேந்தன் ஆகியோரிடம் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது. அம்பாறை […]

இலங்கை

சர்க்கரை கலந்த பானங்களுக்கு புதிய வண்ணக் குறியீடு; விசேட வர்த்தமானி வெளியீடு

July 4, 2026

சர்க்கரை கலந்த திரவ உணவுகளுக்கான வண்ணக் குறியீட்டு விதிமுறைகளில் திருத்தம் செய்து, அதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸவினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 1980 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க உணவுச் சட்டத்தின் 32 ஆம் பிரிவின் கீழ் வெளியிடப்பட்டுள்ள இந்த திருத்தங்களின்படி, சர்க்கரை கலந்த திரவ உணவுப் பொட்டலங்களில் இடம்பெற வேண்டிய வண்ணக் குறியீடுகளின் வடிவமைப்பு மற்றும் காட்சிப்படுத்தல் தொடர்பான புதிய விதிமுறைகள் […]