Tue. Jul 7th, 2026 18:00:24
இலங்கை

ஆலையடிவேம்பு, தமிழரசுக் கட்சி ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கும் நிகழ்வு

admin - May 18, 2026

ஆலையடிவேம்பு, தமிழரசுக் கட்சி ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கும் நிகழ்வு….

( வி.ரி.சகாதேவராஜா)

அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அக்கரைப்பற்று வம்மியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் ஆலையடிவேம்பு, இலங்கை தமிழரசு கட்சியினரின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் நினைவுக் கஞ்சி வழங்கி வைக்கும் நிகழ்வும் உணர்வுபூர்வமாக இன்றைய தினம் (18) மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றது.

 இறுதி யுத்தத்தின் போது உயிர் இழந்த உயிர்கள் மற்றும் இறுதி யுத்தத்தில் தமிழர்கள் எதிர்கொண்ட துயரங்களை நினைவு கூறும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கும் நிகழ்வு வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 12 திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரை அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.