September 5, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > துறைநீலாவணை ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த்mதிருச்சடங்கு வைபவம் இன்று ஆரம்பம்!

துறைநீலாவணை ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த்mதிருச்சடங்கு வைபவம் இன்று ஆரம்பம்!

செல்லையா பேரின்பராசா 

வரலாற்று சிறப்பு மிக்க துறைநீலாவணை ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய திருச்சடங்கு வைபவம் இன்றிரவு செவ்வாய்க் கிழமை (26.05.2026) இடம்பெறும் திருக்கதவு திறத்தல் வைபவத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 02.06.2026 செவ்வாய்க் கிழமை அதிகாலை இடம்பெறும் திருக்குளிர்த்தி பாடல் மற்றும் பொங்கல் வைபவத்துடன் இனிதே நிறைவுபெறவுள்ளது.

இத் திருச்சடங்கு வைபவத்தின் விசேட நிகழ்வுகளான அம்மனின் ஊர்க்காவல் வைபவம் மற்றும் கன்னிக்கால் வெட்டும் நிகழ்வுகள் என்பன முறையே 29.05.2026 வெள்ளிக் கிழமையும் 31.05.2026 ஞாயிற்றுக் கிழமையும் இடம்பெறவுள்ளது.

இவ் ஆலய திருச்சடங்கு வைபவத்தின் பிரதம பூசகராக ஆசிரிய ஆலோசகர் சிவத்திரு க.ஜமுனாகரனும் உதவிப் பூசகராக அபிவிருத்தி உத்தியோகத்தர் சிவத்திரு த.சசிகரனும் பணியாற்றவுள்ளனர்.