Tue. Jul 7th, 2026 18:00:39
இலங்கை

காரைதீவின் முதல் மருத்துவர் பரஞ்சோதி லண்டனில் காலமானார்!

admin - May 25, 2026

( வி.ரி. சகாதேவராஜா)

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் பிறந்த பழம் பெரும் தமிழ்க் கிராமமான

காரைதீவின், முதல் மருத்துவர் டாக்டர் செல்லத்துரை  பரஞ்சோதி லண்டனில் நேற்று(24) தனது 80  ஆவது வயதில் காலமானார்.

காரைதீவைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட காரைதீவின் முதலாவது வைத்திய கலாநிதியும், புகழ் பூத்த மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் முதலாவது வைத்தியருமான டாக்டர் செல்லத்துரை பரஞ்சோதி நேற்று லண்டனில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற முன்னாள் மாவட்ட தந்தி இலாகா பரிசோதகரும் கண்ணகை அம்மன் கோவில் தர்மகர்த்தாவுமான செல்லத்துரை இன்ஸ்பெக்டர், அமரர் அன்னப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு புதல்வராவார்.

 தங்கமணியின் அன்புக் கணவரான இவர் Dr. கருணாகரன் Space Medicine NASA, America Dr.ரேனுகா ,London, சுசித்ரா ,London ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

1936.01.11 இல் பிறந்தஅன்னாரின் தகனக்கிரியைகள் இலண்டனில் விரைவில் நடைபெறும் . சரியான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என குடும்பத்தின் சார்பில் அவரது மருமகன் மா.வித்தியானந்தன்  தெரிவித்தார்.