September 5, 2026

Blog Post

Kalmunai Net > பிரதான செய்தி > இந்திய நன்கொடையாக இலங்கை பொலிஸாருக்கு 134 கெப் வாகனங்கள் கையளிப்பு!

இந்திய நன்கொடையாக இலங்கை பொலிஸாருக்கு 134 கெப் வாகனங்கள் கையளிப்பு!

இந்தியா அரசாங்கம், இந்திய – இலங்கை நட்புறவு திட்டத்தின் கீழ் இலங்கை பொலிஸாரின் பயன்பாட்டிற்காக நன்கொடையாக வழங்கிய 134 கெப் ரக வாகனங்களை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி, இந்தியா இலங்கைக்கு தொடர்ந்து வழங்கி வரும் ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றியைத் தெரிவித்தார்.

மேலும், இந்த திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்ல அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அவரது பணியாளர்களுக்கும் அவர் தனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.