Tue. Jul 7th, 2026 18:00:50
பிரதான செய்தி

தங்கள் நாட்டில் இணையக் கட்டுப்பாடுகளை தளர்த்த ஈரானிய அதிபர் உத்தரவு!

admin - May 26, 2026

ஈரானில் விதிக்கப்பட்டிருந்த இணையக் கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு அதிபர் Masoud Pezeshkian உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாதுகாப்பு மற்றும் அரசியல் பதற்ற நிலைமைகளைத் தொடர்ந்து நீண்ட நாட்களாக அமலில் இருந்த இணையத் தடைகளை படிப்படியாக நீக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, சர்வதேச இணைய அணுகலை மீண்டும் வழமையாக்கும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.