Tue. Jul 7th, 2026 18:00:45
இலங்கை

உதவும் பொற்கரங்களின் கல்வி ஊக்குவிப்பு திட்டத்தில் வாகரை மாணவி இணைப்பு

admin - June 14, 2026

உதவும் பொற்கரங்கள் கனடா அமைப்பின் கல்வி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வாகரையைச் சேர்ந்த மாணவி ஒருவர் மாதாந்திர கல்வி உதவித் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த அவர், கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்திற்கு தெரிவாகியுள்ளார். அவரது உயர்கல்வி நடவடிக்கைகளுக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் நோக்கில், உதவும் பொற்கரங்கள் அமைப்பின் மாதாந்திர உதவித் தொகை திட்டத்தில் அவர் உள்வாங்கப்பட்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக, இன்றைய தினம் வாகரை பிராந்திய இணைப்பாளர் செல்வி தியாக்சா ஊடாக மாணவிக்கான ஐந்து மாதங்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்கி வைக்கப்பட்டது.

இந்த முயற்சி, பொருளாதார வசதிகள் குறைந்த மாணவர்களின் உயர்கல்விப் பயணத்திற்கு உறுதுணையாக அமையும் என அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.