September 5, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > ருக்மாங்கதன் ரிஷார்த்தகி பாடிய பெரிய நீலாவணை அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய திருச்சடங்கு கும்மிப் பாடல் வெளியிடப்பட்டது!

ருக்மாங்கதன் ரிஷார்த்தகி பாடிய பெரிய நீலாவணை அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய திருச்சடங்கு கும்மிப் பாடல் வெளியிடப்பட்டது!

வி.ரி.சகாதேவராஜா

பெரியநீலாவணை அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய கும்மிப்பாடல் வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை(19) ஆலய முன்றலில் ஆலய தலைவர் எஸ். குபேரன் தலைமையில்  நடைபெற்றது. .

இசையின் மூலம் இறைவன் மீது தீவிரமான பக்தியை வெளிக்காட்டும் வகையில் அருள்மிகு பேச்சியம்மன் கும்மிப்பாடலாக இவ் இறுவெட்டு அமைந்துள்ளது. 

இக் கும்மிப்பாடலு க்கான வரிகள் மற்றும் பாடலை கோபாலகிருஷ்ணன் கிருஸ்ணசௌறி பாடியுள்ளார்.

 இவரோடு அழகு ததும்பும் பெண்குரலில் பாடகி கானக்குயில் ருக்மாங்கதன் ரிஷார்த்தகி பாடியுள்ளார்.

பாடகி ரிஷார்த்தகி தற்போது பட்டிருப்பு தேசிய பாடசாலையில் தரம் 10 இல் கல்விகற்று வருகின்றார். இக் கும்மிப்பாடலு க்கான இசை மற்றும் ஒளிப்பதிவு ஜெ. சங்கர்ஜன் செய்துள்ளார்.

பாடகி ரிஷார்த்தகியின் தந்தை ருக்மாங்கதன் சமூக செயற்பாட்டாளராகவுள்ள தோடு தற்போது இலங்கை மின்சார சபையின் மின் மானி வாசிப்பாளராக கடமையாற்றிய வருகின்றார். இவரது மனைவி துவேனிகா வும் சமூக ஆர்வலராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமரர் செல்வரெட்ணம் நவரட்ணம் அவர்களின் 28வது ஞாபகார்த்தமாக, அன்னாரின் புதல்வர் ருக்மாங்கதன் அவர்களின் அனுசரணையில் இந்தக் கும்மிப் பாடல் இறுவெட்டு வெளியிடப்பட்டது.

ஆலயத்தின் ஆன்மிக மற்றும் பாரம்பரிய சிறப்பை எடுத்துரைக்கும் இந்த வெளியீட்டு நிகழ்வில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் ஆசிரிய ஆலோசகர் எம்.லக்குணம், தமிழகரன் சனா, பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய பூசகர் சிவரெத்தினம், சிவசிறி விதுசன் சர்மா உட்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

பாடலை பாடியவர் இசையமைத்தவர் பாடலை எழுதியோர் ஆலய பரிபாலனசபையினரால் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியை பா.மேனன் தொகுத்து வழங்கினார்

மேலதிக தகவல்களை Gk-Mahasenaa முகநூல் மற்றும் யூடியூப் பக்கங்கள் ஊடாக அறிந்து கொள்ள முடியும்.