September 5, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர்களின் பொதுக்கூட்டம் ஜூலை 4ஆம் திகதி

பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர்களின் பொதுக்கூட்டம் ஜூலை 4ஆம் திகதி

மட்/பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில், 2026ஆம் ஆண்டிற்கான விளையாட்டு விழா மற்றும் நடைபவணியை முன்னிட்டு அனைத்து பழைய மாணவர்களுக்குமான பொதுக்கூட்டம் எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி (சனிக்கிழமை) பிற்பகல் 3.00 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

விளையாட்டு விழா மற்றும் நடைபவணி தொடர்பான ஏற்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதால், அனைத்து பழைய மாணவர்களும் தவறாது கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பாக முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறு பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன், இவ்வறிவிப்பை அனைத்து பழைய மாணவர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.