Tue. Jul 7th, 2026 16:45:18
இலங்கை

கனகர் கிராமத்தில் வெஸ்டன் தமிழர் சங்கம் கனடா அமைப்பினால் பொதுக்கிணறு அமைக்கப்பட்டுள்ளது

admin - May 9, 2026

பொத்துவில் கனகர் கிராம மீள் குடியேற்ற மக்களுக்கான பொதுக் கிணறு ஒன்றை அமைக்கும் பணியில் வெஸ்டன் தமிழர் சங்கம் கனடா அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

அப்பகுதியில் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கு அன்றாட ஜீவனோபாயத்தை மேற்கொள்வதற்கான வசதிகள் எதுவும் பூர்த்தியாகாத நிலையில் முக்கியமாக நீருக்கான தட்டுப்பாடு பிரதானமாக காணப்பட்டது. அதனை நிவர்த்திக்கும் வகையில் கனகர் கிராம மக்கள் பிரதேச செயலாளர் கிராம சேவகர் ஊடாக வெஸ்டன் தமிழர் சங்கம் கனடா அமைப்பினரிடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் அங்கு மக்களுக்கு பெரிதும் தேவைப்பாடாக இருந்த குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு தேவையான நீரை பெற்றுக் கொள்வதற்கான பொதுக்கிணறு ஒன்றினை வெஸ்டன் தமிழர் சங்கம் கனடா அமைப்பினர் அமைத்துள்ளனர் இந்த மாத இறுதியில் அது மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட உள்ளது .