September 5, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > ஊடகத்துறையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!

ஊடகத்துறையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் பிரதேச ஊடகவியலாளர் வலையமைப்பொன்றைக் கட்டியெழுப்புவதற்காக பிரதேச செயலகப் பிரிவிற்கும் ஒரு இளைஞர் அல்லது யுவதி வீதம் தெரிவு செய்யும் செயற்பாடு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுதிகளுக்காக வழங்கப்படும் பயிற்சி,உள்ளடக்கப்படும் விடயங்கள் மற்றும் பயிற்சியின் போது அவர்களுக்கு வழங்க கிடைக்கும் சந்தர்ப்பங்கள் குறித்த கலந்துரையாடல் நேற்று (11) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சில் இடம்பெற்றது.

இப் பயிற்சி ஒரு துறையை மாத்திரம் வரையறுக்காது செய்திப் பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் வானொலி,டிஜிட்டல் ஊடகம் போன்ற சகல துறைகளையும் உள்ளடக்கியதாக மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

2500 இற்கும் அதிகமான விண்ணப்பங்களில் தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்காக இந்த சந்தர்ப்பம் கிடைக்க உள்ளது.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சும் ,ஊடகத்துறை அமைச்சும் இணைந்து இத்திட்டத்தை மேற்கொள்கின்றன.

நேர்முகப் பரீட்சையின் பின்னர் இதற்காக இளைஞர் யுவதிகள் தெரிவு செய்யப்படுவதுடன்,ஊடகத்துறையில் பிரவேசிப்பதற்கு எதிர்பார்த்து இருக்கும் இளைஞர் யுவதிகளுக்காக வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் சிறந்த ஊடகவியலை நோக்காகக் கொண்டு தொழில்முறை பிராந்திய ஊடகவியலாளர்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

இக்கலந்துரையாடலில் ஊடகப் பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன,இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் இளைஞர் விவகாரப் பிரிவின் மேலதிக செயலாளர் சுமித் ஷாந்த,அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார,தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர்/பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுபுண் விஜேரத்ன உட்பட இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சு மற்றும் தேசிய சேவைகள் மன்றத்தின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினகரன்