September 5, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > கனகர் கிராம காணி விடுவிப்பு தொடர்பில் சட்டத்தரணி சுமந்திரனுடன் மக்கள் சந்திப்பு 

கனகர் கிராம காணி விடுவிப்பு தொடர்பில் சட்டத்தரணி சுமந்திரனுடன் மக்கள் சந்திப்பு 

(வி.ரி.சகாதேவராஜா)

பொத்துவில் கனகர் கிராம காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனுடன் கல்முனையில் கனகர் கிராம மக்கள் சந்திப்பை மேற்கொண்டனர்.

ஜனாதிபதி மட்டு விஜயத்தோடு ஒட்டியதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் 

ஜனாதிபதி சட்டத்தரணியுமான சுமந்திரன்  அம்பாறை மாவட்டத்திற்கும் விஜயம் செய்திருந்தார்.

பொத்துவில் கனகர் கிராம மக்களின் காணி முழுமையாக விடுவிப்பு செய்யப்படாமல் இருப்பது தொடர்பில் கனகர் கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கல்முனையில் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

 அது தொடர்பில் சட்டநடவடிக்கைகள் எடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் கல்முனைத் தொகுதி தலைவர் சட்டத்தரணி அ.நிதான்சன் மற்றும் முன்னாள் காணி ஆணையாளர் கே. குருநாதன் ஆகியோர் கலந்து கொண்டு இருந்தனர்.