September 5, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > எபோலா பரவல் அச்சம்: இலங்கையில் விசேட கண்காணிப்பு ஆரம்பம்

எபோலா பரவல் அச்சம்: இலங்கையில் விசேட கண்காணிப்பு ஆரம்பம்

எபோலா வைரஸ் பரவல் அபாயத்தை எதிர்கொள்ளும் வகையில் இலங்கையில் ஆரம்ப கட்ட முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார விசேட நிபுணர் வைத்தியர் துஷானி தாபரேரா தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டல்களுக்கு அமைவாக சுகாதார அமைச்சு தேவையான ஆயத்தத் திட்டங்களையும் ஒத்திகைப் பயிற்சிகளையும் முன்னெடுத்து வருவதாக அவர் ஊடக சந்திப்பொன்றில் குறிப்பிட்டார்.

எபோலா தொற்று பதிவாகியுள்ள ஆபிரிக்க நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் பயணிகள் தொடர்பில் விசேட கண்காணிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்திற்கிடமான அறிகுறிகளுடன் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டால் உடனடியாக தொற்றுநோயியல் பிரிவுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், எபோலா தொற்றுக்கான சந்தேக நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக கொழும்பு தொற்றுநோய் வைத்தியசாலை (IDH) முழுமையான ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எபோலா தொற்று தற்போது இலங்கையில் பதிவாகவில்லை என்றாலும், சாத்தியமான அபாயங்களை முன்கூட்டியே தடுக்கும் நோக்கில் சுகாதாரத் துறையினர் தொடர்ச்சியான கண்காணிப்பிலும் தயார்நிலையிலும் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மாற்று தலைப்புகள்: