September 5, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > காரைதீவு கோணேஸ்வரனுக்கு ராஜதந்திர ஜெயந்தி விருது!

காரைதீவு கோணேஸ்வரனுக்கு ராஜதந்திர ஜெயந்தி விருது!

(வி.ரி.சகாதேவராஜா)

அரச சேவை ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் ஏற்பாட்டில், அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்றவர்களின் ஒருமைப்பாட்டை மேம்படுத்தவும் அவர்களின் நலன்களை உறுதிப்படுத்தவும் நோக்கமாகக் கொண்ட “ராஜதந்திர ஜெயந்தி” விழாவில் காரைதீவைச் சேர்ந்த ரி.கோணேஸ்வரனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அரச சேவை ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் அம்பாறை மாவட்ட பொருளாளரும், காரைதீவு பிரதேச செயலாளருமான ரி.கோணேஸ்வரன் ஓய்வுபெற்ற நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தராவார்.

இந்த பாராட்டு விழா நிகழ்வு கொழும்பு டவர் அரங்கில் அண்மையில் நடைபெற்றது.

ஓய்வூதியதாரர்களின் சமூகப் பங்களிப்பை மதிப்பளிக்கும் வகையிலும், அவர்களிடையே நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கத்துடனும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக நம்பிக்கை நிதியத்தின் கொழும்புத் தலைமையகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.