Tue. Jul 7th, 2026 16:48:19
இலங்கை

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் முதலுதவி ஒருநாள் பயிற்சிநெறி

admin - June 11, 2026

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் முதலுதவி ஒருநாள் பயிற்சிநெறி: மாணவர்கள் சமூகத்திற்கு அறிவை எடுத்துச் செல்ல வேண்டுமென வேண்டுகோள்

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் ஆலோசனை மற்றும் தலைமையில், 2026 ஜூன் 10 ஆம் திகதி பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் முதலுதவி வழங்குதல் தொடர்பான ஒருநாள் பயிற்சிநெறி வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளருடன் இணைந்து உதவி பிரதேச செயலாளர் P. பிரணவரூபன், SRILANKA UNITES நிறுவனத்தின் முகாமையாளர் S. றுவுதரன், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் அம்பாறை கிளை வளவாளர் திரு. றொசான், மொழிபெயர்ப்பாளர் திரு. சுதேஷ் ரெசாந்தன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பயிற்சிநெறியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேச சிறுவர் கழக அங்கத்தவர்கள் பங்கேற்று, அவசரகாலங்களில் முதலுதவி வழங்கும் முறைகள் தொடர்பான செயன்முறை விளக்கங்களையும் பயிற்சிகளையும் பெற்றுக்கொண்டனர். பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வை சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் D. ஜாசுகி அவர்கள் ஒருங்கிணைத்திருந்தார். மேலும், SRILANKA UNITES நிறுவனம் மற்றும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் இணைந்து இந்நிகழ்வுக்கு அனுசரனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான பயிற்சிகள் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட முதலுதவி அறிவை மாணவர்கள் தங்களது குடும்பங்கள் மற்றும் சமூகத்தினரிடமும் பகிர்ந்து, உயிர்களைக் காக்கும் விழிப்புணர்வை பரப்ப வேண்டும் என கல்முனை நெற் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறது.

புகைப்படம் மற்றும் தகவல்: திரு. கோ. நவநீதன்