Tue. Jul 7th, 2026 16:48:57
கல்முனை

மாகாண சதுரங்கப் போட்டியில் கார்மேல்பற்றிமா தேசிய பாடசாலை மாணவன் பரமேஸ்வரன் கவிசாந் சம்பியன்!

admin - June 15, 2026

மாகாண சதுரங்கப் போட்டியில் கார்மேல்பற்றிமா தேசிய பாடசாலை மாணவன் பரமேஸ்வரன் கவிசாந் சம்பியன்!

பாடசாலை சதுரங்கச் சங்கத்தின் ஏற்பாட்டில் தெய்யத்தகண்டியில் கடந்த 12, 13 மற்றும் 14.06.2026 ஆகிய தினங்களில் நடைபெற்ற மாகாண சதுரங்கப் போட்டியில், கமு கார்மேல்பற்றிமா தேசிய பாடசாலை சார்பில் பங்கேற்ற மாணவன் பரமேஸ்வரன் கவிசாந் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் சம்பியனாக வென்று சிறப்பிடம் பெற்றுள்ளார்.

இவரின் இந்தப் பெறுபேறு பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.

சாதனை படைத்த மாணவர் பரமேஸ்வரன் கவிசாநுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவரை ஊக்குவித்து வழிநடத்திய பயிற்றுவிப்பாளர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.