Tue. Jul 7th, 2026 16:46:04
இலங்கை

மாகாண சதுரங்கப் போட்டியில் கார்மேல்பற்றிமா தேசிய பாடசாலை மாணவன் ரகு ஜனுகேஷ் இரண்டாம் இடம் (1st Runner -up)

admin - June 15, 2026

பாடசாலை சதுரங்கச் சங்கத்தின் ஏற்பாட்டில் தெய்யத்தகண்டியில் கடந்த 12, 13 மற்றும் 14.06.2026 ஆகிய தினங்களில் நடைபெற்ற மாகாண சதுரங்கப் போட்டியில், கமு கார்மேல்பற்றிமா தேசிய பாடசாலை சார்பில் பங்கேற்ற மாணவன் ரகு ஜனுகேஷ், 12 வயதிற்குட்பட்டோர் பிரிவில் இரண்டாம் இடம் (1st Runner-up) பெற்று சிறப்பான சாதனை படைத்துள்ளார்.

இந்த வெற்றி, மாணவரின் தனிப்பட்ட திறமையை மட்டுமல்லாது, பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்க்கும் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்துள்ளது.

சாதனை படைத்த மாணவன் ரகு ஜனுகேஷ்க்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவரை திறம்பட வழிநடத்திய பயிற்றுவிப்பாளர், அர்ப்பணிப்புடன் ஊக்கமளித்த ஆசிரியர்கள் மற்றும் உறுதுணையாக இருந்த பெற்றோருக்கும் எமது பாராட்டுகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் பல வெற்றிகளைப் பெற்று தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களிலும் மிளிர வாழ்த்துகள்! 🎉♟️