Tue. Jul 7th, 2026 16:43:10
இலங்கை

GCE O/L பரீட்சை முடிவுகள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பங்கள் இன்று முதல்!

admin - June 25, 2026

2025 (2026) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (GCE O/L) பரீட்சை முடிவுகளின் மறுமதிப்பீட்டிற்கான விண்ணப்பங்களை இன்று (25) முதல் ஜூலை 8 ஆம் திகதி வரை இணையவழியில் சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, பரீட்சை முடிவுகளில் திருப்தியற்ற மாணவர்கள் மற்றும் பெறுபேறுகளில் திருத்தங்களை மேற்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள், திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மறுமதிப்பீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க விரும்புவோர் தேவையான வழிகாட்டல்களைப் பின்பற்றி, ஜூலை 8 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.