September 5, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > சம்மாந்துறையில் TVS புதிய காட்சியகம் கோலாகலமாக திறப்பு

சம்மாந்துறையில் TVS புதிய காட்சியகம் கோலாகலமாக திறப்பு

சம்மாந்துறை நகரில் TVS நிறுவனத்தின் 91ஆவது கிளை காட்சியகம் நேற்று (13) சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது.

சம்மாந்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு வாகன விற்பனை மற்றும் விற்பனைக்குப் பிந்திய சேவைகளை வழங்கும் நோக்கில் இந்த புதிய காட்சியகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை, நாவிதன்வெளி மற்றும் காரைதீவு பிரதேச சபைகளின் கௌரவ தவிசாளர்கள், TVS நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் வருகை தந்த அதிதிகள் மற்றும் வாடிக்கையாளர்களை அன்புடன் வரவேற்ற R.N. TVS நிறுவனம் – சம்மாந்துறையின் உரிமையாளர் க. கமல்ராஜ், நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.