Tue. Jul 7th, 2026 16:50:20
இலங்கை

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது

admin - July 3, 2026

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதியான வசந்த கரன்னாகொடவை, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இன்று கைது செய்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவை இலங்கை கடற்படையில் இணைத்துக் கொண்டு, பிரித்தானிய கடற்படை அகாடமிக்கு பயிற்சிக்காக அனுப்பியமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு அவருக்கு ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது.

அதன்படி, ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியதைத் தொடர்ந்து, விசாரணைகளின் அடிப்படையில் வசந்த கரன்னாகொட கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.