Tue. Jul 7th, 2026 17:59:57
இலங்கை

அறநெறிப்பாடசலை ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு

admin - May 11, 2026

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்து அறநெறிப்பாடசலை ஆசிரியர்களுக்கான அறநெறிப்பாடசாலை பாடத்திட்டம், அபிவிருத்தி தொடர்பான கருத்தரங்கு

திருக்கோவில், ஆலையடிவேம்பு, பொத்துவில், லாகுகலை பியதேசசெயலக பிரிவிற்குட்பட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரிருக்கான இந்து அறநெறிப்பாடசலை ஆசிரியர்களுக்கான அறநெறிப்பாடசாலை பாடத்திட்டம், அபிவிருத்தி தொடர்பான கருத்தரங்கு திருக்கோவில் பிரதேசசெயலக மண்டபத்தில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு ய. அனிருத்தனன் அவர்களின் வழிகாட்டலுக்கமைவாக திருக்கோவில் பிரதேசசெயலாளர் திரு த. கஜேந்திரன் அவர்களின் தலமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர் திரு கு. ஜெயராஜி அவர்களினால் அறநெறிப்பாடசாலையின் பாடத்திட்டம், நோக்கம் எதிர்கால நடவடிக்கைகள், அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் பொறுப்புக்கள் கடமைகள் ஆக்கத்திறன் போட்டிகள், குருபூசை நிகழ்வுகள், புதிய மாணவர்களை அறநெறிக்கல்விக்கு இணைத்தல், எதிர்கால நடவடிக்கைகள்,ஆசிரியருக்கான நூலகக்கொடுப்பணவு, ஆசிரியருக்கான சீருடை கொடுப்பணவு, பாடசாலை தளபாடக் கொடுப்பணவு, கட்டிடக்கொடுப்பணவு, பண்ணிசை, யோகாசன வகுப்புக்கள் தொடர்பான விடயங்களை விளக்கினார் , அதனைத்தொடந்து இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வளவாளர் திரு யோ. கஜேந்திரா அவர்களினால் அறநெறிப்பாடசாலைகளை நடத்தும் போது பின்பற்றவேட்டிய கற்பித்தல் நூற்பங்கள், விளையாட்டுக்கள், ஆக்கத்திறன் போட்டி நிகழ்வு தொடர்பான விளக்கம், மாணவர்களின் பங்குபற்றல் தனிநிகழ்வு, குழுநிகழ்வு தனித்துவத்தன்மை தொடர்மாக விளக்கினார் மற்றும் பொத்துவில் இந்து கலாசார உத்தியோகத்தர் திரு ந. பிரதாப் அவர்களினால் ஆக்கத்திறன் போட்டி நிகழ்வுகளில் மாணவர்களின் பங்களிப்பு தொடர்பான கருத்துரை வழங்கப்பட்டதுடன் இந்நிகழ்வுக்கு லாகுகல,பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் கலந்து கொண்டதுடன்எற்பாடுகளை திருக்கோவில் இந்துகலாசார உத்தியோகத்தர் திருமதி நிஷாந்தினி தேவராஜ், ஆலையடிவேம்பு இந்துகலாசார உத்தியோகத்தர் திருமதி சர்மிளா பிரசாந் ஆகியோர் மேற்கொண்டனர்.