September 5, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை > கல்முனை மாநகர சபையில்சேவை நலன் பாராட்டு விழா

கல்முனை மாநகர சபையில்சேவை நலன் பாராட்டு விழா

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபையில் கடமையாற்றி, இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்கள் மற்றும் ஓய்வுபெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா நேற்று வியாழக்கிழமை (21) மாலை, மாநகர சபை கேட்போர் கூடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

கல்முனை மாநகர சபையின் நிர்வாக உத்தியோகத்தர் சுப்ரமணியம் சுபராஜன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

அத்துடன் கல்முனை மாநகர சபையின் கணக்காளர் ஏ.எஸ். மனாஸிர் அஹ்சன், ஆயுர்வேத வைத்திய அதிகாரி ஜுமானா ஹஸீன், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் என். பரமேஸ்வர வர்மன், சுகாதாரப் பிரிவு பொறுப்பு உத்தியோகத்தர் ஏ.எம். டிலிப் நௌசாத், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.சி.ஜே. முஹ்மினா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதன்போது இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களான முபீனா பைசல் அமான், ஏ. அப்துல் வாசித், எம்.ஏ. சாபிர், வி. சுகுமார், ஏ.எச்.எம். ஹஸீனா, ஏ.எச். அஹ்சன் றியாசத், எம்.எஸ்.. உவைத், நிரோஷினி சுபாஷ் சந்திரபோஸ், யூ.எல்.எம். நஸ்ரின் ஹாஜா, ஓய்வு பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களான கே. மகேந்திரராசா, என். பாக்கியராஜா
ஆகியோரின் உன்னத சேவைகள் குறித்து பாராட்டுத் தெரிவிக்கப்பட்டதுடன் பரிசுகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கியும் பொன்னாடைகள் போர்த்தியும் கெளரவிக்கப்பட்டனர்.