September 5, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கராத்தே போட்டிக்கு JKMO உறுப்பினர் நிவலக்ஜன் தெரிவு

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கராத்தே போட்டிக்கு JKMO உறுப்பினர் நிவலக்ஜன் தெரிவு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நேற்று (24) நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கராத்தே தகுதிகாண் போட்டியில், பொறியியல் பீட முதலாம் ஆண்டு மாணவர் T. நிவலக்ஜன் அபார திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம், விரைவில் நடைபெறவுள்ள அனைத்து இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் (All Sri Lanka University Games) பங்குபற்றுவதற்கான தகுதியையும் அவர் உறுதி செய்துள்ளார்.

ஜப்பானிய கராத்தே மருக்கோ (JKMO) கழகத்தின் உறுப்பினரான நிவலக்ஜன், கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது திறமையால் பல்கலைக்கழக மட்டத்தில் பெருமை சேர்த்த மாணவன் T. நிவலக்ஜனுக்கும், அவரைச் சிறந்த முறையில் பயிற்றுவித்த கராத்தே ஆசிரியர் SENSEI S. பாலுராஜ் மற்றும் JKMO கழகத்தினருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.