September 5, 2026

Blog Post

Kalmunai Net > இலங்கை > யாருக்காக இந்த புகைபிடித்த மங்கிய வீதி அறிவித்தல் பலகை?

யாருக்காக இந்த புகைபிடித்த மங்கிய வீதி அறிவித்தல் பலகை?

யாருக்காக இந்த புகைபிடித்த மங்கிய வீதி அறிவித்தல் பலகை?

வீதி அபிவிருத்தி அதிகாரசபை  கவனிக்குமா? 

( வி.ரி.சகாதேவராஜா)

காரைதீவு பிரதான வீதியில் வெள்ளைப் பாலத்துக்கு அருகில் போடப்பட்டுள்ள வீதி திசை நிர்ணய அறிவிப்பு பலகை புகைபிடித்து மங்கிப் போய் உள்ளது.

தூரத்தில் வரும்போதே துல்லியமாக தெரியவேண்டிய இவ் அறிவித்தல் பலகை, இவ்வாறு மங்கி காணப்படுவதால், அம்பாறை மற்றும் அக்கரைப்பற்றுக்கு எந்த திசையால் செல்வதென்பது சாரதிகளுக்கு தெளிவில்லாமல் உள்ளது.

இதனால் நெடுந்தூரம் இருந்து வருகின்ற வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் சிரமப்படுகின்றனர்.

எனவே, இதனை வீதி அபிவிருத்தி அதிகாரசபை  திருத்தி தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதேவேளை, காரைதீவு மதுபானசாலைக்கு முன்பாக பிரதான வீதியில் பாதசாரி கடவை ஒன்று போடப்பட வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் முன் வைத்திருக்கின்றார்கள் .

இந்த இடத்திலே அங்காடிக் கடைகள் ஏனைய கடைகள் இருப்பதால் மக்கள் கூடுதலாக நடமாடும் பிரதேசம். இதனால் வீதியை கடக்கும் போது பெரும்பாலான விபத்துக்கள் கடந்த காலத்தில் நடைபெற்று வந்ததை அறிவோம் .

எனவே இங்கு பாதசாரி கடவையொன்றை ஒன்றை அமைத்து தருமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.