நாளை ஜனாதிபதி மட்டக்களப்புக்கு விஜயம்!
( வி.ரி.சகாதேவராஜா) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை 20 ஆம் திகதி புதன்கிழமை மட்டக்களப்பிற்கு விஜயம் செய்யவுள்ளார். அங்கு காலை 9.30 மணிக்கு , 435 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இலங்கையின் 2 வது பெரிய பொது நூலகத்தை அவர் திறந்து வைக்கவுள்ளார். பின்னர் பழைய மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார். அதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் ஒழிப்பை இலக்காகக் கொண்டு மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் […]