Blog Post

Kalmunai Net > 2026 > May

கல்முனை – செய்திக்கு பலன் கிடைத்தது-நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு

பாறுக் ஷிஹான் கல்முனை கண்ணகி அம்மன் கோவில் அருகில் உள்ள காணி  குப்பை கூழங்களால் நிரம்பி காணப்படுகின்றது என கடந்த மே மாதம் 21 ஆந் திகதி செய்தியில்  குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து  இன்று   கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபியின் அறிவுறுத்தலுக்கமைய இப்பகுதியில்  கனரக வாகனத்தின் உதவியுடன் சுத்தம் செய்யப்பட்டு கொட்டப்பட்டிருந்த துர்நாற்றம் வீசும்  குப்பைகள் யாவும் உழவு இயந்திரத்தின் மூலம் அவ்விடத்தில் இருந்து அகற்றி செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் இச்செயற்பாட்டினை துரித கதியில் […]

Read More

இரசாயன வெற்று கொள்கலன்களை அகற்ற புதிய திட்டம் அறிமுகம் 

( வி.ரி.சகாதேவராஜா) கிளீன் ஸ்ரீலங்கா ( Clean Srilanka )வேலைத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்படுத்தும் இரசாயன திரவங்களின் வெற்றுக் கொள்கலன்களை அகற்றுவதற்கு புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது. காரைதீவு பிரதேச விவசாய போதனாசிரியர் பிரிவுக்குட்பட்ட வளைந்தவட்டைக் கிழல் கண்டத்தில் இந்த நிகழ்வு நேற்று முதல் முறையாக நடைபெற்றது. காரைதீவு பிரதேச விவசாய போதனாசிரியர் திருமதி சஜிகலா ரகுநந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், உதவி விவசாய பணிப்பாளர் திருமதி அழகுமலர் ரவீந்திரன் கலந்து கொண்டார்.  விவசாயிகளுக்கு […]

Read More

காரைதீவு பிரதான வீதி வடிகான்களின் நிலை : வீதி அபிவிருத்தி அதிகாரசபை கவனம் செலுத்துமா?

காரைதீவு பிரதான வீதி வடிகான்களில் குப்பைகள்;   சிறு மழைக்கே வெள்ளம் – போக்குவரத்து பாதிப்பு வீதி அபிவிருத்தி அதிகாரசபை கவனம் செலுத்துமா? (வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு பிரதான வீதியோர வடிகான்கள் குப்பைகள் மற்றும் கழிவுப்பொருட்களால் நிரம்பியுள்ளதால், சிறியளவிலான மழை பெய்தால்கூட வெள்ளநீர் தேங்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பிரதான வீதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதுடன், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் வடிகான்களில் நீர் சரிவர ஓடாத காரணத்தால், மழைநீர் வீதியில் […]

Read More

பழைய முறையிலேயே மாகாண சபைத் தேர்தல் நடத்த வேண்டும்: 42 கட்சிகளும் சிவில் அமைப்புகளும் ஒருமித்த கோரிக்கை

மாகாண சபைத் தேர்தலை பழைய முறையிலேயே நடத்த வேண்டும் என வலியுறுத்தி, கொழும்பில் 42 அரசியல் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. இது தொடர்பான கலந்துரையாடலில் தேர்தல் முறை மாற்றம் மேலும் தாமதத்தை ஏற்படுத்தும் என்பதால், பழைய விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்கள் கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்படாத நிலையில், தேர்தல் முறைமை மற்றும் எல்லை நிர்ணய […]

Read More

2021 இலிருந்து யாழ்- கதிர்காம பாதயாத்திரை பண்டத்தரிப்பு பிரான்பற்றில் இருந்தே ஆரம்பமாகிறது – பாதயாத்திரை குழுத் தலைவர் ஜெயாவேல் சாமி விளக்குகிறார் .

 பாதயாத்திரை குழுத் தலைவர் ஜெயாவேல் சாமி விளக்குகிறார் . (  வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற  இலங்கையின் மிகநீண்ட யாழ்ப்பாணம் – கதிர்காமம்  பாதயாத்திரையானது 2021 இலிருந்து  பண்டத்தரிப்பு பிரான்பற்றில் இருந்தே ஆரம்பமாகிறது. இது சந்நிதி நிருவாகத்திற்கு தெரியாதா? இவ்வாறு கடந்த 14 வருடங்களாக பாதயாத்திரையில் ஈடுபட்டும், கடந்த ஏழு வருடங்கள் தலைமை தாங்கியும் , மூன்று மாகாணங்களையும் 7 மாவட்டங்களையும் 815 கிலோமீட்டர் தூரம் 58 நாட்களில் கடந்து வழிநடாத்தி வருகின்ற பாதயாத்திரைக்குழுத் தலைவருமான ஜெயா […]

Read More

தங்கள் நாட்டில் இணையக் கட்டுப்பாடுகளை தளர்த்த ஈரானிய அதிபர் உத்தரவு!

ஈரானில் விதிக்கப்பட்டிருந்த இணையக் கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு அதிபர் Masoud Pezeshkian உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் அரசியல் பதற்ற நிலைமைகளைத் தொடர்ந்து நீண்ட நாட்களாக அமலில் இருந்த இணையத் தடைகளை படிப்படியாக நீக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, சர்வதேச இணைய அணுகலை மீண்டும் வழமையாக்கும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More

இலங்கை ஏற்றுமதி வருமானம்: 4 மாதங்களில் $5.7 பில்லியனை கடந்தது

உலகளாவிய ரீதியில் நிலவும் சவாலான பொருளாதாரச் சூழல்களுக்கு மத்தியிலும், 2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாத காலப்பகுதியில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் (பொருட்கள் மற்றும் சேவைகள் உள்ளடங்களாக) 5,784.38 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 4.3% வளர்ச்சியாகும். குறிப்பாக 2026 ஏப்ரல் மாதத்தில் மட்டும் மொத்த ஏற்றுமதி வருமானம் 1,380.93 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளதுடன். இது கடந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தை விட 6% […]

Read More

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கராத்தே போட்டிக்கு JKMO உறுப்பினர் நிவலக்ஜன் தெரிவு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நேற்று (24) நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கராத்தே தகுதிகாண் போட்டியில், பொறியியல் பீட முதலாம் ஆண்டு மாணவர் T. நிவலக்ஜன் அபார திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம், விரைவில் நடைபெறவுள்ள அனைத்து இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் (All Sri Lanka University Games) பங்குபற்றுவதற்கான தகுதியையும் அவர் உறுதி செய்துள்ளார். ஜப்பானிய கராத்தே மருக்கோ (JKMO) கழகத்தின் உறுப்பினரான நிவலக்ஜன், கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் […]

Read More

கல்முனை கடற்கரை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசித் திருக்குளிர்த்தி உற்சவம் ஆரம்பம்!

கல்முனை:வரலாற்றுச் சிறப்புமிக்க கல்முனை மாநகர் அருள்மிகு கடற்கரைக் கண்ணகை அம்மன் ஆலயத்தின் நடப்பு பரபாவ வருடத்திற்கான வருடாந்த வைகாசித் திருக்குளிர்த்தி மகோற்சவம், இன்று (25.05.2026) திங்கட்கிழமை திருக்கதவு திறத்தலுடன் பக்திப் பூர்வமாக ஆரம்பமாகியுள்ளது. இன்று மாலை 6.30 மணிக்கு அம்பாளின் திருக்கதவு திறக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து முதலாம் நாள் இரவுப் பூசையும், பாரம்பரிய வழக்குரைப்பாடல் பாடுதலும் ஆரம்பமாகவுள்ளன. தொடர்ந்து வரும் நாட்களில் தினமும் பிற்பகல் 1.00 மணிக்கு விசேட பூசைகளும், மாலை 6.00 மணிக்கு ஸ்ரீ சத்திய […]

Read More

இன்று காரைதீவு கண்ணகை அம்பாளின்  வைகாசி திருக்குளிர்த்திச் சடங்கு  ஆரம்பம்.

(வி.ரி. சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு  ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி சடங்கு இன்று 25ஆம் திகதி திங்கட்கிழமை மாலை  கடல்தீர்த்தம் எடுத்துவந்து கல்யாணக்கால் நடலுடன்  ஆரம்பமாகவுள்ளது. ஆலயத்திலிருந்து தர்மகர்த்தாக்கள் கப்புகனார் சகிதம் பக்தர்கள் கடலுக்குச்சென்று தீர்த்தம் எடுத்து வரும்வழியில் கலயாணக்கால் முறித்து அதனைக்கொணர்ந்து ஆலயத்தில் நடுவார்கள். தொடர்ந்து ஏழு நாட்கள் சடங்கு நடைபெற்று ஜூன் 02ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30மணிக்கு திருக்குளிர்த்தி பாடலுடன் சடங்கு நிறைவடையும்.  சடங்குகள் அனைத்தும் ஆலய கப்புகனார்  […]

Read More