காப்பியநாயகி கற்புக்கரசி கண்ணகைத்தாயின் வைகாசி திருச்சடங்கு – கட்டுரை – வி. ரி. சகாதேவராஜா
காப்பியநாயகி கற்புக்கரசி கண்ணகைத்தாயின் வைகாசி திருச்சடங்கு வைகாசி பிறந்துவிட்டால் கிழக்கின் பட்டிதொட்டியெல்லாம் பறையொலி முழங்க, குழல்நய ஓசையெழுப்ப, வைகாசிப் பொங்கல் நடைபெறுவது வழமை. கிழக்கில் பெரும்பாலான தமிழ்க்கிராமங்கள் இச்சடங்கினால் களைகட்டும். நாளை (25) திங்கட்கிழமை இவ்வைகாசித்திருவிழாச்சடங்கு பெரும்பாலான கண்ணகி ஆலயங்களில் ஆரம்பமாகிறது. ( சில இடங்களில் நாள்கள் மாறுபடலாம்) வடக்கில் வற்றாப்பளை கண்ணகை அம்மனாலயத்திலும் இச்சடங்கு சிறப்பாக நடைபெற்றுவருகிறது. பூம்புகாரைத் தலைநகராகக்கொண்டு சோழ நாட்டிலே பிறந்து, பாண்டியநாட்டிலே அரசியல் புரட்சி செய்து, சேரநாட்டிலே தெய்வமாகிய கண்ணகை அம்பாள் […]