Blog Post

Kalmunai Net > 2026

சட்டசபையில் விஜய் அரசு பெரும்பான்மையை நிருபித்தது!

ஆதரவு 144 -எதிர்ப்பு22 -நடுநிலை5 தி. மு. க வெளிநடப்பு 2026 சட்டசபைத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான Tamilaga Vettri Kazhagam (TVK) 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. முழு பெரும்பான்மைக்கு தேவையான எண்களை எட்டாத நிலையில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML), CPI மற்றும் CPM உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு வழங்கின.இதன் மூலம் TVK கூட்டணி பெரும்பான்மை ஆதரவை உறுதி செய்தது. பின்னர் முதலமைச்சராக பதவியேற்ற […]

Read More

தாதிய தினத்தில் சிறந்த சேவைக்கான பாராட்டை பெற்றனர் கல்முனை ஆதார வைத்தியசாலையின் தாதியர்கள்!

உலக தாதிய தினம் கல்முனை ஆதார  வைத்தியசாலையில் (12) கொண்டாடப்பட்டது.மேலும் ஒரு வார காலமாக பல சிறப்பு நிகழ்வுகளும் இடம்பெற்று வந்துள்ளது. இதில் இரத்த தான நிகழ்வும் இடம்பெற்றது சிறப்பம்சமாகும்.இந்நிகழ்வுகள் யாவும் தாதிய பரிபாலகர் திரு சசிதரன் அவர்களின் முழு பொறுப்பிலும், தலைமையிலும் நடைபெற்றுள்ளது. நேற்றைய நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்களும்,சிறப்பு அதிதிகளாக கலாநிதி சங்கரப்பிள்ளை சுஜேந்திரன்பேராசிரியர் ( சுகாதார விஞ்ஞானபீடம் கிழக்கு பல்கலைக்கழகம்) அவர்களும்,  […]

Read More

இலங்கையில் 40 ஆண்டுகள் ஆன்மீக பணியாற்றிய சுவாமி ராஜேஸ்வரானந்த ஜி மகாராஜ்ஜிற்கு பிரிவு உபசார விழா

( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை இராமகிருஷ்ண மிஷினில் கடந்த 40 வருடங்களாக கல்வி சமூக கலாச்சார ஆன்மீக பணியாற்றி வந்த மூத்த துறவி ஸ்ரீமத் சுவாமி ராஜேஸ்வரானந்தா ஜீ, ஓய்வுபெற்று  இறுதி ஆன்மீக தவவாழ்வை மேற்கொள்ளுமுகமாக இந்தியா செல்லவுள்ளார். இலங்கையிலிருந்து பிரியாவிடை பெறவிருக்கின்ற இத்தருணத்தில், கொழும்பிலும், மட்டக்களப்பிலும், கொட்டகலையிலும் அவருக்கு மகத்தான பிரியாவிடை நிகழ்வை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர், எதிர்வரும் வெள்ளிக்கிழமை 15 ஆம் தேதி மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷினுக்கு வருகை தர உள்ளார்.  அங்கு 17 […]

Read More

ஊடகத்துறையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் பிரதேச ஊடகவியலாளர் வலையமைப்பொன்றைக் கட்டியெழுப்புவதற்காக பிரதேச செயலகப் பிரிவிற்கும் ஒரு இளைஞர் அல்லது யுவதி வீதம் தெரிவு செய்யும் செயற்பாடு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுதிகளுக்காக வழங்கப்படும் பயிற்சி,உள்ளடக்கப்படும் விடயங்கள் மற்றும் பயிற்சியின் போது அவர்களுக்கு வழங்க கிடைக்கும் சந்தர்ப்பங்கள் குறித்த கலந்துரையாடல் நேற்று (11) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சில் இடம்பெற்றது. இப் பயிற்சி ஒரு துறையை மாத்திரம் வரையறுக்காது செய்திப் பத்திரிகை, […]

Read More

திருக்கோவில் பிரதேசத்தில் தெய்வீக சேவைத்திட்டத்தின் கீழ் இந்து ஆலயங்களின் ஆவணங்களை ஒழுங்குடுத்தும் வேலைத்திட்டம்!

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்து ஆலயங்களின் ஆவணங்களை ஒழுங்குபடுத்தும் நோக்கில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு ய. அனிருத்தனன் அவர்களின் வழிகாட்டலுக்கமைவாக திருக்கோவில் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட இந்து ஆலயங்களின் ஆவணங்களின் ஒழுங்கு படுத்தும் நோக்குடன் திருக்கோவில் பிரதேசசெயலாளர் திரு த. கஜேந்திரன் அவர்களின் தலமையில் இடம்பெற்றது இந்நிகழ்வு தொடர்பான ஏற்பாடுகளை பிரதேச இந்துகலாசார உத்தியோகத்தர் திருமதி நிஷாந்தினி தேவராஜ் மேற்கொண்டார். இந்நிகழ்வில் ஆலய ஆவணங்களை ஒழுங்குபடுத்துதல் பாதுகாத்தல் தொடர்பான விடயங்களை மாவட்ட […]

Read More

சிறப்பாக செயற்பட்ட மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட வைத்தியசாலைகளுக்கு விருது!

“நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சிறப்பாக செயற்பட்ட மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட வைத்தியசாலைகளுக்கு விருது வழங்கும் விழா” 2025ஆம் ஆண்டிற்கான நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட திட்ட முன்மொழிவுகள் மற்றும் வைத்தியசாலைகளுக்கிடையிலான தர முகாமைத்துவம் தொடர்பான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு, 30.04.2026 அன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டாக்டர் ஆர். சதுர்முகம் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. “ஒவ்வொரு சிசுவுக்கும், ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான […]

Read More

ஜனாதிபதி அநுரவுக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர் விஜய்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்த வாழ்த்துக்கு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வாழ்த்துச் செய்தியொன்றை எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஜனாதிபதியின் அந்த வாழ்த்துச் செய்திக்கு தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ள தமிழக முதலமைச்சர் விஜய், “இலங்கை ஜனாதிபதி கௌரவ அநுர குமார திசாநாயக்க அவர்களின் வாழ்த்துக்களால் நான் மிகுந்த கௌரவமடைகிறேன். உங்களது அன்பான இந்தச் செயலுக்கு […]

Read More

வலயமட்ட போட்டியில் துறைநீலாவணை ம.வி.அணி கிரிக்கட் மற்றும் எல்லே போட்டிகளில் சம்பியனானது

-தி.சதீஸ்- வலயமட்ட போட்டியில் துறைநீலாவணை ம.வி.அணி கரிக்கட் மற்றும் எல்லே போட்டிகளில் சம்பியனானது பட்டிருப்பு வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான எல்லே விளையாட்டு சுற்றுப்போட்டியில் முதலாமிடம் பெற்று மாகாணமட்ட போட்டிக்கு துறைநீலாவணை ம.வி அணியினர் தெரிவானார்கள், அவ்வாறே கிரிக்கட் போட்டியிலும் முதலிடம் பெற்று சம்பியனாகியுள்ளது.உடற்கல்வி ஆசிரியர் றபி அஷாம் மற்றும் விளையாட்டுப்பயிற்றுவிப்பாளர் முரளிகிருஷ்ணா ஆகியோரின் நெறிப்படுத்தலில் மாணவர்கள் இந்த வெற்றியை பதிவுசெய்தனர்.

Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அம்பாறையிலும் ஆரம்பம்; தம்பிலுவில் சந்தை முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்!!

( வி.ரி.சகாதேவராஜா) தமிழின் அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் கோர சம்பவ நினைவாக முன்னெடுக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்  இன்று அம்பாறை மாவட்டத்திலும் ஆரம்பமாகியுள்ளது. அம்பாரை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட   உறவினர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு இன்று (12) செவ்வாய்க்கிழமை   திருக்கோவில் தம்பிலுவில் பொது சந்தைக்கு முன்பாக  முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தளிக்கப்பட்டது. அங்கு கஞ்சி காய்ச்சி முன்னாலுள்ள பிள்ளையார் ஆலயத்தில் வைத்து வழிபட்டு பின்னர் மக்களுக்கு மே 18 என எழுதப்பட்ட சிரட்டை யில் […]

Read More

ADMK இல் இருந்து ஒரு அணி முதல்வர் விஜய்க்கு ஆதரவு!

தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையிலான அதிமுக பிரதிநிதிகள் இன்று மாலை முதலமைச்சர் விஜய்யை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் உள்கட்சிப் பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி தலைமையை எதிர்த்து கட்சிக்குள் அதிருப்தி நிலவி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த நிலையில், சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான சில எம்.எல்.ஏ.க்கள் தனியாக ஆலோசனைகள் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. […]

Read More