அவுஸ்திரேலியாவில் பரிசுபெறும் 04 இலங்கை எழுத்தாளர்களின் நூல்கள்- சஞ்சீவி சிவகுமாரின் ”நற்பிட்டிமுனைத் தமிழர் வரலாற்றுச் சால்புகள்” உட்பட நான்கு நூல்கள் தேர்வு
( வி.ரி.சகாதேவராஜா) அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும், அஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச் சங்கம் இலங்கை எழுத்தாளர்களின் சிறந்த நான்கு நூல்களைத் தெரிவுசெய்துள்ளது. அவர்களின் பெயர் விபரங்கள் நேற்றிரவு வெளியிடப்பட்டன. நாவல், சிறுகதைத் தொகுப்பு, கவிதை, கட்டுரை ஆகிய நான்கு ஆக்க வகைகளில் இத்தெரிவு இடம்பெற்றுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் வெளியிடப்பட்ட நூல்களில் சங்கத்தின் பரிசளிப்புத் திட்டத்திற்குக் கிடைக்கப்பெற்ற நூல்களில் சிறந்த நூல்களாகத் தெரிவுசெய்யப்பட்டு, ஒவ்வொன்றும் ஐம்பதாயிரம் இலங்கை ரூபாவைப் பரிசாகப் பெறும் நூல்களையும், அவற்றை எழுதியவர்களையும் […]