Blog Post

Kalmunai Net > Articles by: admin

பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

சுற்றுலா பணியக நிதி மோசடி வழக்கு பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் நிதி மோசடி தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளுக்காக, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் 7.8 மில்லியன் ரூபாய் நிதி பயன்படுத்தப்பட்டதாக […]

Read More

கண்ணகியா? கண்ணகையா? – விளக்கமளிக்கிறார் வித்தகர் வி.ரி.சகாதேவராஜா

வைகாசி பிறந்து விட்டால் கண்ணகி அம்மன் வழிபாடு  களைகட்டும். இந்த வேளையில் பலரும் வினவுவது கண்ணகி அம்மனா? கண்ணகை அம்மனா?  இருவேறு பதங்கள் பாவிக்கப் படுகின்றன. எனவே இத் தெய்வத்தை எவ்வாறு அழைப்பது? சில இடங்களிலே கண்ணகி என்று குறிப்பிடுகிறார்கள். சில இடங்களில் கண்ணகை என்று குறிப்பிடுகிறார்கள்.  ஒரே ஆலயத்திலேயே இந்த இரண்டு சொற்பதங்களும் பதாகைகளிலும் ,  தோரணங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது . இதன் விளக்கம் என்ன? எது சரி? எது பிழை ?என்று பலரும் கேட்டார்கள் . […]

Read More

யாழ்- கதிர்காம பாதயாத்திரீகர்கள் முள்ளிவாய்க்காலில்; ஞாயிறு வற்றாப்பளையில்! 

( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற இலங்கையின் மிக நீண்ட யாழ்ப்பாணம் – கதிர்காமம் பாதயாத்திரை  எட்டாம் நாளான நாளை சனிக்கிழமை (30)  முள்ளிவாய்க்காலை அடைகின்றது.  நாளை மறுநாள் ஒன்பதாம் நாள் (31) ஞாயிற்றுக்கிழமை வரலாற்று பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தை சென்றடைகின்றது. அங்கு குளிர்த்திச்சடங்கு பார்க்க ஒருநாள் தங்கியிருந்து ஓய்வெடுப்பர். ஜெயா வேல்சாமி தலைமையிலான 121 பேர் கொண்ட இந்த பாதயாத்திரை கடந்த 23 ஆம் திகதி சந்நிதியிலிருந்து புறப்பட்டது. மேலும், […]

Read More

பட்டிருப்பு கல்வி வலய மட்ட தமிழ் மொழி தினத்தின போட்டி நிகழ்வு

அகில இலங்கை தமிழ் மொழி தினத்தின் (2026) பட்டிருப்பு கல்வி வலய மட்ட போட்டிகள்  மட்/பட்/ களுதாவளை மகாவித்தியாலயத்தில்  (தேசிய பாடசாலை) பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் ஓய்வு பெற்ற மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் சி.மனோகரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். படஙகள் செல்லையா பேரின்பராசா 

Read More

வெசாக் தினங்களில் இறைச்சிக் கடைகளுக்குப் பூட்டு – கல்முனை மாநகர சபையின் முக்கிய அறிவித்தல்.!

👉 வெசாக் வாரத்தை முன்னிட்டு பொது நிருவாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மே மாதம் 30 ஆம் திகதி சனிக்கிழமை, 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஜூன் மாதம் 01 ஆம் திகதி திங்கட்கிழமை ஆகிய மூன்று தினங்களும் ஆடு, மாடு, கோழி என்பன அறுப்பது முற்றாக தடை செய்யப்பட்டிருக்கிறது. இதன் பிரகாரம் கல்முனை மாநகர சபை எல்லையினுள் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் விலங்கறுமனைகளும் நாளை முதல் குறித்த 03 […]

Read More

பாண்டிருப்பு மகாவித்தியாலய நுழைவாயில் வரவேற்பு பலகை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

பாண்டிருப்பு மகாவித்தியாலயத்தின் 2006 ஆம் ஆண்டு GCE O/L பழைய மாணவர்களின் நிதிப்பங்களிப்பில் பாடசாலையின் நுழைவாயிலில் புதிய வரவேற்பு பலகை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. பாடசாலையின் அழகியமைப்பையும் அடையாளப் பெருமையையும் மேம்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு நிதியுதவியையும் 2006 ஆம் ஆண்டு பழைய மாணவர்கள் வழங்கியுள்ளனர். அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் அழைக்கப்பட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு பழைய […]

Read More

ஜனாதிபதியின் அவசர வர்த்தமானி வெளியீடு: பல பொதுச் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்திற்குப் பிந்தைய சூழ்நிலையை முன்னிட்டு, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் அத்தியாவசிய சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் பல பொதுச் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், ஜனாதிபதி Anura Kumara Dissanayake வியாழக்கிழமை (28) இரவு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். இந்த உத்தரவு அரசாங்க திணைக்களங்கள், […]

Read More

கனடா வாழ் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் பழைய மாணவர்களின் மரநடுகை செயல் திட்டம் (2026)

“ஒன்றிணைந்து சேவை செய்வோம், ஒன்றிணைந்து வளர்வோம்”என்ற தொனிப்பொருளின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட மர நடுகை நிகழ்வானது, இயற்கை அன்னையின் ஆசிர்வாத மழையின் மத்தியிலும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் பழைய மாணவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வானது (23) கனடா மிசிசாகா புறோக்மிட் பார்க்கில் நடைபெற்ற போது, வயது வேறுபாடு இன்றி அனைவரும் பங்கு பற்றி இந்நிகழ்வை சிறப்பித்துள்ளனர். வருகை தந்தவர்களுக்கு ஏற்பாட்டுக் குழுவினரால் நன்றி கூறப்பட்டதுடன், மர நடுகையின் முக்கியத்துவமும் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் வருகை தந்த […]

Read More

காரைதீவு கண்ணகையின் பகல் சடங்கு பூஜை

வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்திச் சடங்கின் மூன்றாவது நாள் (28)பகல் சடங்கு  பூஜையின்போது.. படங்கள் . வி.ரி.சகாதேவராஜா

Read More

கல்முனை – செய்திக்கு பலன் கிடைத்தது-நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு

பாறுக் ஷிஹான் கல்முனை கண்ணகி அம்மன் கோவில் அருகில் உள்ள காணி  குப்பை கூழங்களால் நிரம்பி காணப்படுகின்றது என கடந்த மே மாதம் 21 ஆந் திகதி செய்தியில்  குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து  இன்று   கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபியின் அறிவுறுத்தலுக்கமைய இப்பகுதியில்  கனரக வாகனத்தின் உதவியுடன் சுத்தம் செய்யப்பட்டு கொட்டப்பட்டிருந்த துர்நாற்றம் வீசும்  குப்பைகள் யாவும் உழவு இயந்திரத்தின் மூலம் அவ்விடத்தில் இருந்து அகற்றி செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் இச்செயற்பாட்டினை துரித கதியில் […]

Read More