Blog Post

Kalmunai Net > Articles by: admin

வியட்நாம் ஆசிய மல்யுத்த போட்டி: இலங்கையணியில் மட்டக்களப்பு வீராங்கனை தவிசாலினி தேர்வு!

வியட்நாமில் நடைபெறவுள்ள 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மகளிர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், இலங்கையின் சார்பாகப் போட்டியிடும் தேசிய அணியில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை யோகேந்திரகுமார் தவிசாலினி தெரிவு செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு தாண்டவன்வெளி ஜோசப் வாஸ் வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் இந்த 17 வயது மாணவி, சர்வதேச மல்யுத்த அரங்கில் தடம் பதிக்கவுள்ளமை ஒட்டுமொத்த கிழக்கு மாகாணத்திற்கும் பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது. கண்டி, திகன பகுதியில் நடைபெற்ற ஆசிய மட்ட மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடருக்கான […]

Read More

இலங்கையில் ஸ்மார்ட்போன்களின் விலை உயர்வு? கலக்கத்தில் நுகர்வோர்!

இலங்கையில் ஸ்மார்ட்போன்களின் விலை உயர்வு? கலக்கத்தில் நுகர்வோர்! ​அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருவதால், நாட்டில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் இலத்திரனியல் சாதனங்களின் விலைகள் கணிசமாக உயரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.​விலை உயர்வுக்கு என்ன காரணம்?​தற்போதைய பொருளாதார சூழலில் டொலரின் மதிப்பு அதிகரித்துள்ளதால், இறக்குமதி செலவுகள் பன்மடங்கு உயர்ந்துள்ளன. இதன் காரணமாக:​ஸ்மார்ட்போன்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களின் விலைகளை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.​வேறு வழியின்றி இந்த விலை அதிகரிப்பை நடைமுறைப்படுத்த நேரிடும் என இலங்கை […]

Read More

அம்பாறை மாவட்டத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார இன்று 22 விஜயம்: பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைக்கிறார்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (வெள்ளிக்கிழமை) அம்பாறை மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டவுள்ளதுடன், முக்கிய நிர்வாகக் கூட்டங்களிலும் பங்கேற்கவுள்ளார். முக்கிய நிகழ்வுகள்:ஜனாதிபதியின் இந்த விஜயம் நாளை காலை நிந்தவூர் பகுதியிலிருந்து ஆரம்பமாகவுள்ளது. காலை 09.30 மணியளவில் நிந்தவூர் பிரதேச சபை காரியாலயத்திற்கு அருகில் அமையவுள்ள “நிந்தவூர் கலாசார மையத்திற்கான” அடிக்கல்லை அவர் நாட்டி வைக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து, முற்பகல் 11.30 மணியளவில் […]

Read More

கட்டுரை – சடங்கு என்பது என்ன?

வி.ரி.சகாதேவராஜா வைகாசி பிறந்து விட்டால் கண்ணகை அம்மன் ஆலயங்களில் வைகாசி சடங்கு களைகட்டும் . வைகாசி சடங்கு வைகாசிப் பொங்கல் என்கிறோம்.இது விழா அல்ல சடங்கு என்று கூறுகின்றோம் . சடங்கு என்றால் என்ன என்பது தொடர்பாக பலரும் நினைவினார்கள். அதற்கான விளக்கம் இதோ. சமூக வாழ்விலும் ஆன்மீக வாழ்க்கையிலும் “சடங்கு” என்பது முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.  மனிதன் பிறக்கும் தருணத்திலிருந்து இறக்கும் வரை பல்வேறு சடங்குகள் அவனது வாழ்வோடு இணைந்தே வருகின்றன.  இவை வெறும் பழக்கவழக்கங்களாக […]

Read More

சுவிஸ் உதயம் தமிழ் அமைப்பினால் மாத்தளை சிங்கள மாணவர்களுக்கு கணினிகள் 

(வி.ரி. சகாதேவராஜா) சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் மாத்தளை கல்வி வலயத்திற்குட்பட்ட முகந்தெனிய சிங்கள வித்தியாலய மாணவர்களின் கல்விச்செயற்பாடுகளுக்காக இரண்டு கணிகள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வு நேற்று  20 ஆம் திகதி புதன்கிழமை சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் அப்பாடசாலையில்  இடம்பெற்றது. இந்நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் பொருளாளரும் இலங்கைக்கான இணைப்பாளருமான சமூகசேவகர் க.துரைநாயகம், செயலாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன், பொருளாளர் எஸ். கருஸ்ராஜ், உபதலைவர் ஒய்வு நிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் கண […]

Read More

கல்முனை பிராந்திய (அம்பாறை மட்டு மாவட்டம்) நாடு, நாடுகடந்து வாழ்கின்ற எம் இனிய உறவுகளே! சித்தி விநாயகர் பெருமானின் அடியார்களே!

பல நூற்றாண்டு வரலாற்றைக் கடந்து அருள் மழை பொழிகின்ற கல்முனை ஆதார வைத்தியசாலையின் சித்தி விநாயகப் பெருமானின் ஆலயம், வரலாற்றுப் புகழுக்கு ஏற்ப பொலிவற்றுள்ளதாலும், கும்பாபிஷேகத்தை நடத்தி முடிக்க வேண்டியதனாலும் திருத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. வைத்தியசாலைக்கு வரும் இந்துக்கள்  அனைவரும் வீடு செல்லுமுன் விநாயப் பெருமானை வழிபட்டுத்தான் விடை பெறுகின்றனர். எந்த ஒரு துணையும் இன்றி வாழ்கின்ற இப்பிரதேச இந்து மக்கள், உங்களைப் போன்ற பேருள்ளம் கொண்ட அடியவர்களை மட்டும் நம்பியே இப்பிரதேசத்தை இன்னும் தக்க […]

Read More

கல்முனை ஆதார வைத்தியசாலையில் சித்திவிநாயகர் ஆலய புனருத்தாரணம் 

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை ஆதார வைத்தியசாலையில் சைவசமய ஆகமப்படி உருவாக்கப்பட்ட பழமை வாய்ந்த ஶ்ரீ சித்தி வினாயகர் ஆலயத்தில் தற்போது புனருத்தாரண வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.  ஆலய புனரமைப்பு பணிகளை அண்மையில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவி.கோடீஸ்வரன் வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் குண.சுகுணன் சகிதம் சென்று பார்வையிட்டார். இவ் ஆலயம் வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளின் மனக்குறையை ஒப்புவித்து அருள் மற்றும் நிம்மதி பெறும் இடமாக கணப்படுகின்றது.  இக் கோயில் இந்து மக்களின் ஒரு சிறப்பான […]

Read More

பிபிலை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகராக  டாக்டர் ஹிரிசானந் நியமனம் 

( வி.ரி.சகாதேவராஜா) பிபிலை பேராசிரியர் சேனகபிபிலே ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக வைத்திய கலாநிதி மருத்துவர் கந்தசாமி ஹிரிசானந்த் நியமிக்கப்பட்டிருக்கின்றார் . காரைதீவைச் சேர்ந்த, கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ  பட்டதாரியான மருத்துவர் ஹிரிசானந்,  தற்போது மருத்துவ நிர்வாக  முதுமானி  பட்டத்தை (MBBS,MSc.Medi.Admin). பெற்றதன் காரணமாக வைத்திய அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்றுள்ளார். கடந்த வாரம் அவர் அங்கு சென்று கடமையை பொறுப்பேற்றார். அங்கு 10 வைத்திய நிபுணர்கள் உள்ளடங்கலான 56 வைத்தியர்கள், 101 தாதிய உத்தியோகத்தர்கள் […]

Read More

இலங்கை அரசின் முயற்சி :இஸ்ரேலியக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை மனிதாபிமான ஆர்வலர் சமீரா!

காசா மக்களுக்கான மனிதாபிமான உதவிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை பெண் ஆர்வலர் சமீரா மஹ்பூப்தீன் (Sameera Mehboobdeen) பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டு, இஸ்ரேலிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. “குளோபல் சுமூத் புளோட்டிலா” (Global Sumud Flotilla) எனப்படும் சர்வதேச மனிதாபிமான உதவிக் கப்பல் முயற்சியில் கலந்து கொண்டிருந்த சமீரா, காசா மக்களுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தார். இதன்போது, அந்தக் கப்பல் அணியை இஸ்ரேலிய கடற்படை சர்வதேச கடற்பரப்பில் […]

Read More

இலங்கையில் 3-ல் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம்: சுகாதார அமைச்சு கடும் எச்சரிக்கை!

இலங்கையில் வாழும் மக்களில் மூன்றில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.நாட்டில் பதிவாகும் மொத்த மரணங்களில் சுமார் 34 சதவீதமான மரணங்கள், உயர் இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் சிக்கல்களாலேயே நிகழ்கின்றன என சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரீனி அலகப்பெரும தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் வெளியிட்ட முக்கிய விபரங்கள் வருமாறு: 🚨 அறிகுறிகளற்ற ஆபத்து (The Silent Killer) உயர் இரத்த […]

Read More