Blog Post

Kalmunai Net > Articles by: admin

கல்முனை – இராணுவத்தின் ஏற்பாட்டில் “Bech Clean Up”  கடற்கரையில் மாபெரும் சிரமதானம்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட கல்முனை மாநகர பிரதேசங்கள் உட்பட சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர்  ‘அழகான கடற்கரை’ செயற்றிட்டம் Clean srilanka  வேலைத்திட்டத்தின் ஊடாக  வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தின் ‘கிளீன் சிறிலங்கா’ திட்டத்தின் ஓர் அங்கமாக ‘அழகான கடற்கரை’ எனும் செயற்றிட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கடற்கரை பிரதேசங்களை சிரமதானம் மூலம் துப்பரவு செய்யும் விசேட வேலைத் திட்டம் இலங்கை இராணுவத்தின்  18வது விஜயபாகு காலாட்படையணி  ஏற்பாட்டில்  இன்று   காலை  7.30 மணி […]

Read More

இன்று யாழ்- கதிர்காம நீண்ட பாதயாத்திரை ஆரம்பம்!

இன்று யாழ்- கதிர்காம நீண்ட பாதயாத்திரை ஆரம்பம்! இலங்கையின் மிக நீண்ட புனித யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி – கதிர்காம பாதயாத்திரை இன்று சனிக்கிழமை காலை [2026.05.23] யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பமான போது… படங்கள். வி.ரி.சகாதேவராஜா

Read More

கல்முனை மாநகர சபையில்சேவை நலன் பாராட்டு விழா

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபையில் கடமையாற்றி, இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்கள் மற்றும் ஓய்வுபெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா நேற்று வியாழக்கிழமை (21) மாலை, மாநகர சபை கேட்போர் கூடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. கல்முனை மாநகர சபையின் நிர்வாக உத்தியோகத்தர் சுப்ரமணியம் சுபராஜன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். அத்துடன் கல்முனை மாநகர சபையின் கணக்காளர் […]

Read More

கல்முனை ஆதாரவைத்தியசாலையில் வரவேற்பு விழாவும் கௌரவிப்பு விழாவும் 

( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை ஆதாரவைத்தியசாலையின் வைத்தியசாலைக் குழுவின் ஏற்பாட்டில்,புதிதாக வைத்தியசாலையில்  பிரதிப் பணிப்பாளராக கடமையேற்ற மருத்துவர் பொன்னுச்சாமி ஸ்ரீ சங்கர் மற்றும் மகத்தான சீரிய சேவையாற்றிவரும்  பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன் மற்றும் சிரேஷ்ட வைத்திய அதிகாரி மருத்துவர் சாமித்தம்பி ராஜேந்திரா ஆகியோருக்கு வரவேற்பு விழாவும்  கௌரவிப்பு விழாவும் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வு வைத்தியசாலை குழுத் தவிசாளரும், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான  சந்திரசேகரன் ராஜன் தலைமையில் இன்று (22) வெள்ளிக்கிழமை […]

Read More

எம் கே.சிவாஜிலிங்கம் அவர்களுக்கு பெருந்தொகை நன்கொடை : உடன் முடிவெடுத்த ஜனாதிபதி சட்டத்தரணி கே வி தவராசா.!

யாழ்மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த்தேசிய பற்றாளருமான எம் கே சிவாஜிலிங்கம் அவர்களின் உடல் நிலை சிகிச்சையான சிறுநீரக மாற்றுச்சிகிகிச்சைக்காக ரூபா 70, இலட்சம் தேவை எனவும் விரும்பியவர்கள் அன்பளிப்பு செய்யுமாறும் சிவாஜிலிங்கம் அண்ணர் சமூக வலைத்தளங்கள் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை கருத்தில் எடுத்து ஜனாதிபதி சட்டத்தரணியும், தமிழத்தேசிய கொள்கை பற்றாளருமான எமது மதிப்புக்குரிய கே.வி. தவராசா அவர்களின் கவனத்திற்கு இன்று காலையில் இதனை தெரியப்படுத்தினேன். அதனை மனப்பூர்வமாக ஏற்று “கௌரி சங்கரி தவராசா ஞாபகார்த்த […]

Read More

பசில் ராஜபக்ஷவை கைது செய்ய உத்தரவு!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை! மாத்தறை: முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று (மே 22) பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.மாத்தறை, ப்ரவுன்ஸ் ஹில் (Brown’s Hill) பகுதியில் அமைந்துள்ள அரச காணிகளை சட்டவிரோதமான முறையில் கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.எனினும், குறித்த வழக்கு விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று […]

Read More

நஷ்டத்தை ஏற்படுத்தி வரும் 31 தேவையற்ற அரசாங்க நிறுவனங்கள் எதிர்காலத்தில் மூடப்பட வேண்டிவரும் அம்பாறையில் ஜனாதிபதி

பாறுக் ஷிஹான் நஷ்டத்தை ஏற்படுத்தி வரும் 31 தேவையற்ற அரசாங்க நிறுவனங்கள் எதிர்காலத்தில் மூடப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அம்பாறையில் புதிய நகர சபைக்கான அடிக்கல் நாட்ட வருகை தந்த ஜனாதிபதி, அங்கு கூடியிருந்த மகா சங்கரத்ன மற்றும் பிற மதத் தலைவர்களை வாழ்த்தி, பின்னர் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவால் நகர சபைக்காகத் தயாரிக்கப்பட்ட பெயர் பலகையை திறந்து வைத்தார். பின்னர், அவ்விடத்திற்கு வருகை தந்த […]

Read More

பெரும் குற்றவாளியை கைது செய்த  காரைதீவு பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஜனாதிபதி விருது!

பெரும் குற்றவாளியை கைது செய்த  காரைதீவு பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஜனாதிபதி விருது! ​ ( வி.ரி.சகாதேவராஜா) களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய காலப்பகுதியில், பாரிய குற்றச்செயல் ஒன்றுடன் தொடர்புடைய தலைமறைவாக இருந்த குற்றவாளியை சாமர்த்தியமாக கைது செய்த காரைதீவைச்சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ரி.றிசோவுக்கு  ஜனாதிபதியினால் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. ​தற்போது வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ரி.றிசோ   இவ்வாறு ஜனாதிபதியின் பாராட்டைப் பெற்றுக்கொண்டவராவார். ​களுவாஞ்சிகுடி பகுதியில் இடம்பெற்ற குறித்த பெரும் குற்றச்சம்பவத்தின் பின்னர் நீண்டகாலமாக பொலிஸாரிடம் சிக்காமல் தலைமறைவாக […]

Read More

உகந்தமலை முருகன் ஆலயத்திற்கு மூன்று வருடங்களாகியும் பரிபாலன சபை நியமிக்கப்படவில்லை – இந்து அமைப்புகள் ஆர்வலர்கள் கவலை!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை முருகன் ஆலயத்திற்கு மூன்று வருடங்களாகியும்  பரிபாலன சபை நியமிக்கப்படவில்லை. அதனால் அங்கு பல்வேறு பட்ட நிருவாக நடைமுறைப் பிரச்சினைகள் நிலவி வருகின்றன என்று அம்பாறை மாவட்ட இந்து அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அங்கு கடந்த வாரம் பாலஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளது. குரங்குகளின் தொல்லை அதீதமாக காணப்படுகிறது. தனியே மரபுவழி வண்ணக்கர் ஒருவரால் இப் பாரிய ஆலயத்தை தன்னந்தனியாக நின்று பரிபாலனம் செய்ய முடியாது. இதேவேளை ,இனி மகா […]

Read More

நிந்தவூருக்கு ஜனாதிபதி வருகை – மக்கள் அமோக வரவேற்பு

பாறுக் ஷிஹான்ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க   அம்பாறை மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டவுள்ளதுடன் முக்கிய நிர்வாகக் கூட்டங்களிலும் பங்கேற்கவுள்ளார். இன்று  காலை  நிந்தவூர் பிரதேச சபை காரியாலயத்திற்கு அருகில் அமையவுள்ள நிந்தவூர் கலாசார மையத்திற்கான  அபிவிருத்தி வேலைகளை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றினார். அத்துடன் அங்கிருந்து மற்றுமொரு  நிகழ்விற்கு செல்ல முன்னர் குறித்த நிகழ்விற்கு […]

Read More