Blog Post

Kalmunai Net > 2026 > June

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்; குவைத் விமான நிலையம் தாக்குதலுக்கு இலக்கு

குவைத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் பலர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலால் விமான நிலையத்தின் முதன்மை பயணிகள் முனையக் கட்டிடத்தில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களால் குவைத்திற்கும், குவைத்திலிருந்தும் இயக்கப்படும் அனைத்து விமான சேவைகளும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தற்போது வானில் பயணித்துக் கொண்டிருந்த பல விமானங்கள் அருகிலுள்ள மாற்று விமான நிலையங்களுக்கு […]

Read More

கோப்பாய் கலாசாலையில் சுற்றுச்சூழல் தினம்

. செல்லையா பேரின்பராசா கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டிய நிகழ்வுகள் 03.06.2026 புதன் காலை இடம் பெற்றன கலாசாலை அதிபர். சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் சூழலியலாளர் தமிழ் தேசிய பசுமை இயக்கத் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார் அதிதிக்கான அறிமுக உரையை கலாசாலையில் சிரேஷ்ட விரிவுரையாளர் சிவலோசனி சுரேந்திரன் ஆற்றினார்.

Read More

14 வயதுடைய இளம் பௌத்த பிக்கு துஸ்பிரயோகம்-அம்பாறை மாவட்டத்தில் சம்பவம்

பாறுக் ஷிஹான் 14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை தொடர்ச்சியாக துஸ்பிரயோகம் மேற்கொண்டு தலைமறைவாகி இருந்த 41 வயதுடைய பௌத்த தேரரை மத்திய முகாம் பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் மத்திய முகாம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுகந்த கம பகுதியில் அமைந்துள்ள விகாரையில் செவ்வாய்க்கிழமை(2) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் போது விகாரையில் தங்கி இருந்த 5 இளம் பிக்குகில் 3 இளம் பிக்குகள் அண்மையில் தப்பி சென்ற சம்பவம் தொடர்பில் அறிந்த ஊர் மக்கள் […]

Read More

ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளை பாடசாலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு விநியோகித்த இருவர் கைது

கைது செய்ய சென்ற பொலிஸாரும் காயம்-சம்மாந்துறையில் சம்பவம் பாறுக் ஷிஹான்- நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த பல குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் தலைமறைவாகி இருந்த நிலையில் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தேக நபராக கைது செய்யப்பட்டதுடன் மற்றுமொருவரும் போதை மாத்திரைகளுடன் சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவமானது செவ்வாய்க்கிழமை(3) இரவு அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரு வேறு இடங்களில் இடம்பெற்றுள்ளதுடன் போதைப் பொருளுடன் நடமாடிய 2 சந்தேக நபர்கள் இதன் போது […]

Read More

“ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்” தேசிய செயற்திட்டம் கல்முனை வடக்கில் ஆரம்பம்!

“ இலங்கையில் நிலவும் பல்முக வறுமையை ஒழித்து, கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் “ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்” பிரஜாசக்தி தேசிய செயற்திட்டம் நாடளாவிய ரீதியில் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் பாண்டிருப்பு, கல்முனை உள்ளிட்ட நான்கு கிராம சேவையாளர் பிரிவுகளில் ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்றன. “வளமான நாடு, அழகான வாழ்க்கை” […]

Read More

அம்பாறையின் முதல் நிகழ்வு சம்மாந்துறையில் ஆரம்பம்!

( வி.ரி. சகாதேவராஜா) ​இலங்கையில் நிலவும் பல்முக வறுமையை ஒழித்து, கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் அனுசரணையுடன் “ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்” எனும் புதிய தேசிய செயற்திட்டம் நாடளாவிய ரீதியில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  மக்களின் வரிப்பணத்திலிருந்து 25,000 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் முன்னெடுக்கப்படும் இப் பாரிய செயற்திட்டம் ஜூன் மாதம் 02ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.  இதன் கீழ், அம்பாறை […]

Read More

ஊழல் ஒழிப்பில் கவனம்: வருவாய் நிறுவனங்களின் செயற்பாடுகள் ஆய்வு

அரச வருவாய் நிறுவனங்களில் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தல் இலங்கையில் ஊழல் ஒழிப்பு மற்றும் நல்லாட்சியை வலுப்படுத்தும் நோக்கில், முக்கிய அரச வருவாய் நிறுவனங்களின் நேர்மைத்தன்மை மற்றும் உள்ளக கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், 2025–2029 தேசிய ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்றங்கள் மீளாய்வு செய்யப்பட்டன. குறிப்பாக இலங்கை சுங்கத் திணைக்களம், […]

Read More

கதிர்காமத்தில் கன்னிக்கால் நட்டாயிற்று!

( வி.ரி.சகாதேவராஜா)  வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வருடாந்த ஆடிவேல் பெருவிழாவின் முதன்மை மற்றும் தனிச்சிறப்புமிக்க சடங்கான கன்னிக்கால் நடும் வைபவம் நேற்று (1) திங்கள் கிழமை அதிகாலை கதிர்காமக் கந்தனின் சன்னிதியில் இடம்பெற்றது. நேற்றுடன் ஆரம்பமாகிய இந்தப் புனித விழாக்காலம் அடுத்துவரும் 45 நாட்களில் பக்திப் பேரொளியினாலும் பக்தர்களின் அரோகரா கோஷங்களினாலும் திருத்தலத்தைத் திகழச் செய்யவுள்ளது.  எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி கொடியேற்றத்துடன் தொடங்கி  29 ஆம் திகதி […]

Read More

வேலோடுமலையில் ஐந்து பாணலிங்கங்கள் பிரதிஷ்டை 

(வி.ரி.சகாதேவராஜா)  உலகப் புகழ்பெற்ற காசி மாநகரிலிருந்து பக்திப்பூர்வமாகக் கொண்டுவரப்பட்ட, மிகவும் புனிதமான ஐந்து பாணலிங்கங்கள் வேலோடுமலை முருகன் ஸ்தலத்திலே புனிதமான வைகாசி விசாக நன்னாளினில், முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அடியார்கள் திரளாகக் கலந்துகொண்ட இந்த ஆன்மீக வைபவம், வேலோடுமலைத் தலத்தில் ஆதீன கர்த்தா தியாகராஜ சுவாமிகள் தலைமையில் மிகக் கோலாகலமாகவும் பக்திப் பரவசத்துடனும் அரங்கேறியுள்ளது.  வைகாசி விசாக நன்நாளில் சுக்ர ஹோரையில் வேலோடு மலை முருகன் ஆலயத்தில் அகத்தியர் பெருமானின் ஆணைப்பாடி ஜீவ நாடியில் உரைக்கப்பட்ட பஞ்ச […]

Read More

சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக தௌபீக் பதவியுயர்வு.

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாரை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின்   “சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக”.(MN – 7 . SUPRA GRADE) 2023.01.01 முதல் அமுலுக்கு வரும் வகையில் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால்  நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கான பதவியுயர்வு நியமனக் கடிதம் கடந்த 2026.06.01 ம் திகதி திங்கட்கிழமை              கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து  கிழக்கு மாகாண ஆளுநர். பேராசிரியர் […]

Read More