பட்டிருப்பு கல்வி வலயமட்ட மெய்வல்லுநர் திறனாய்வு போட்டியில் களுதாவளை மகாவித்தியாலயம் (தேசிய பாடசாலை) முதலாம் இடம்
செல்லையா பேரின்பராசா. பட்டிருப்பு கல்வி வலய பாடசாலைகளுக்கிடையிலான வலயமட்ட மெய்வல்லுநர் திறனாய்வு போட்டியில் -2026 இருநூற்று ஐம்பத்து ஆறு புள்ளிகளைப் பெற்று (256 புள்ளிகள்) இவ்வாண்டும் மட் /பட்/களுதாவளை மகாவித்தியாலயம் (தேசிய பாடசாலை) முதலாம் இடத்தினைப் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளது. இதற்கான வெற்றிக் கிண்ணத்தை இப் பாடசாலை அதிபர் பேரின்பராசா ரேகாசலன் இவ்விழாவில் கலந்து சிறப்பித்த அதிதிகளிடம் இருந்து பெற்றுக் கொண்டார். இந்த மெய்லல்லுனர் திறனாய்வு போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் […]