சம்மாந்துறை பிரதேச தவிசாளருக்கு எதிராக உறுப்பினர்கள் போர்கொடி
பாறுக் ஷிஹான் பெண்களை பாரபட்சமாக நடாத்துவதுடன் எம்மால் திட்டமிட்டு வழங்கப்படும் அபிவிருத்தி நிகழ்வுகளை புறக்கணிப்பு செய்வதாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் ஒரு வருட நிறைவினை முன்னிட்டும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளராக செயற்படும் ஐ.எல்.எம். மாஹிர் தொடர்பிலான செயற்பாடுகளையும் முன்னிறுத்தி சபை அமர்விலிருந்து வெளிநடப்பு செய்த சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் விசேட செய்தியாளர் சந்திப்பினை சம்மாந்துறை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் செவ்வாய்க்கிழமை(9) […]