Blog Post

Kalmunai Net > 2026 > June

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை: கத்தார் மத்தியஸ்தக் குழு மீண்டும் டெஹ்ரானுக்கு பயணம்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுக்கும் நோக்கில், கத்தாரின் உயர்மட்ட மத்தியஸ்தக் குழு மீண்டும் ஈரான் தலைநகர் டெஹ்ரானை சென்றடைந்துள்ளது. ஈரானின் இஸ்னா (ISNA) செய்திச் சேவை வெளியிட்டுள்ள தகவலின்படி, கத்தார் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானியின் பிரத்தியேக ஆலோசகர் தலைமையிலான குழுவே இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளது. கடந்த வாரம் அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்புகளுக்கு இடையே நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, […]

Read More

பாதுகாப்பான புலம்பெயர் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் செயலமர்வு-   சுவிட்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் பங்கேற்பு

(ஷினா) புலம்பெயர் கொள்கை அபிவிருத்திக்கான சர்வதேச நிறுவனம்,வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்  சுற்றுலாத்துறை அமைச்சு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியாகம் ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர் தகவல் நிலையம் (Migration Information Centre – MIC) வேலை திட்டத்தின் கீழ் இலங்கை வாழ் பொதுமக்கள் புலம்பெயர் வெளிநாட்டு பயணங்களின் போது சட்டவிரோதம் அற்ற பாதுகாப்பான பயணங்களை  மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு  (13) மருதமுனை மூன் விலேஜ் விடுதி மண்டபத்தில் நடைபெற்றது. சுவிஸ்லாந்து நாட்டின் […]

Read More

மாகாண மட்டத்திற்கு தெரிவான கல்முனை வடக்கு ஆண்கள், பெண்கள் கூடைப்பந்து அணிகள்!

50வது தேசிய விளையாட்டு விழாவின் அம்பாறை மாவட்ட மட்ட கூடைப்பந்து போட்டிகள் 13.06.2026 அன்று கார்மேல் பாற்றிமா தேசிய பாடசாலை வளாகத்தில் நடைபெற்றன. இப்போட்டிகளில் கல்முனை வடக்கு பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிபெற்று மாகாண மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளன. மாகாண மட்டத்திற்குத் தெரிவாகியுள்ள அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளையும், அடுத்த கட்டப் போட்டிகளிலும் சிறந்த வெற்றிகளைப் பெற வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Read More

உதவும் பொற்கரங்களின் கல்வி ஊக்குவிப்பு திட்டத்தில் வாகரை மாணவி இணைப்பு

உதவும் பொற்கரங்கள் கனடா அமைப்பின் கல்வி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வாகரையைச் சேர்ந்த மாணவி ஒருவர் மாதாந்திர கல்வி உதவித் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளார். 2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த அவர், கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்திற்கு தெரிவாகியுள்ளார். அவரது உயர்கல்வி நடவடிக்கைகளுக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் நோக்கில், உதவும் பொற்கரங்கள் அமைப்பின் மாதாந்திர உதவித் தொகை திட்டத்தில் அவர் உள்வாங்கப்பட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, இன்றைய தினம் வாகரை பிராந்திய இணைப்பாளர் செல்வி தியாக்சா ஊடாக […]

Read More

சம்மாந்துறையில் TVS புதிய காட்சியகம் கோலாகலமாக திறப்பு

சம்மாந்துறை நகரில் TVS நிறுவனத்தின் 91ஆவது கிளை காட்சியகம் நேற்று (13) சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது. சம்மாந்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு வாகன விற்பனை மற்றும் விற்பனைக்குப் பிந்திய சேவைகளை வழங்கும் நோக்கில் இந்த புதிய காட்சியகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சம்மாந்துறை, நாவிதன்வெளி மற்றும் காரைதீவு பிரதேச சபைகளின் கௌரவ தவிசாளர்கள், TVS நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். நிகழ்வில் வருகை தந்த அதிதிகள் […]

Read More

36வது தேசிய இளைஞர் கழக விளையாட்டுப் போட்டி: கல்முனை வடக்கு பெண்கள் கிரிக்கெட் அணி இரண்டாம் இடம்

36வது தேசிய இளைஞர் கழக விளையாட்டுப் போட்டியின் அம்பாறை மாவட்ட மட்ட பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி இறக்காமம் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற பெண்கள் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாம் இடத்தை வெற்றிகரமாகப் பெற்றுக்கொண்டது. போட்டியில் திறமையுடன் பங்கேற்று இவ்வெற்றியைப் பெற்ற வீராங்கனைகள் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டிய பயிற்றுவிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். வாழ்த்துகள்! மேலும் பல வெற்றிகளைப் பெற்று மாவட்டத்திற்கும் […]

Read More

ஊடகவியலாளர் அஸ்லம் மௌலானாவுக்கு ஹாஷிம் உமர் பவுண்டேஷனின் நிதியுதவி.!

பகற்கொள்ளைச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள சாய்ந்தமருதைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸ்லம் எஸ். மௌலானா அவர்களுக்கு ஹாஷிம் உமர் பவுண்டேஷன் சார்பில் ஒரு இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பவுண்டேஷன் தலைமையகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பவுண்டேஷன் நிறுவுநரான புரவலர் ஹாஷிம் உமர் அவர்கள் இந்த நிதியுதவியை வழங்கி வைத்தார். கல்முனை ஸாஹிரா கல்லூரியில் அண்மையில் இடம்பெற்ற சம்பவமொன்றில், அஸ்லம் மௌலானாவின் மூத்த புதல்வரான ஆஷிப் மௌலானா (தரம் 09) அவர்களின் வலது […]

Read More

மிகச் சிறப்பாக நடைபெற்ற நற்பிட்டிமுனை அம்பலத்தடி விநாயகர் ஆலய கொடியேற்றம்

( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை மாநகர் நற்பிட்டிமுனை அருள்மிகு ஸ்ரீ அம்பலத்தடி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்றத் திருவிழா இன்று 13 ஆம் திகதி சனிக்கிழமை பக்தி பூர்வமாக நடைபெற்றது. ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் திருவிழாவை நடாத்தினார்கள். ஆலய பரிபாலன சபை தலைவர் கே.கனகராசா மற்றும் சபையினர் பக்தர்கள் கலந்து கொண்டனர். அதேவேளை, 19 ஆம் தேதி பக்தி முக்தி திருவிழாவும், 20ஆம் தேதி திருவேட்டைத் திருவிழாவும், […]

Read More

கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் 28 வது  புதிய தலைவராக எந்திரி கதீஷன் ஞாயிறு மாலை பதவியேற்பு !

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் 28 வது  புதிய தலைவராக வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் லயன் எந்திரி நடராஜா கதீஷன் நாளை மறுநாள் (14) ஞாயிற்றுக்கிழமை மாலை பதவிப் பிரமாணம் செய்யவிருக்கிறார். கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் (Lions Club of Kalmunai Town) 2026/2027 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு கல்முனை ஆர்.கே.எம். சந்தியில் அமைந்துள்ள வைட் லோட்டஸ் […]

Read More