Blog Post

Kalmunai Net > 2026 > June

மருதமுனைக்கு தனியான நகரசபை வேண்டும்–அனைத்துப் பள்ளிவாசல் அமைய செயற்பாட்டாளர் எம்.ஐ.எம். முஹர்ரப்

பாறுக் ஷிஹான் மருதமுனைக்கான தனியான நிர்வாக அலகு வேண்டும்-மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் அமையம் மருதமுனைக்கான தனியான நிர்வாக அலகு வேண்டும்.அதிகாரப் பகிர்வின் ஊடாக இதனைப் பெற்று இன்னும் எங்கள் மக்களின் தேவைகளை சிறப்பாகச் செய்ய வேண்டும் என மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் அமைய செயற்பாட்டாளர் எம்.ஐ.எம். முஹர்ரப் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் மருதமுனை பிரதேசத்திற்கான தனியான நகர சபையை வலியுறுத்தி விசேட ஊடகவியலாளர் மாநாடு ஒன்றினை செவ்வாய்க்கிழமை(16) இரவு மருதமுனை தனியார் விடுதியில் நடைபெற்ற போது மேற்கண்டவாறு […]

Read More

பிரான்சில் ஜி7 உச்சிமாநாடு ஆரம்பம்

பிரான்சின் எவியான்-லெ-பெய்ன்ஸ் நகரில் ஜி7 நாடாளுமன்றத் தலைவர்களின் உச்சிமாநாடு செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்கா – ஈரான் இடையேயான புதிய அமைதி ஒப்பந்தம் மற்றும் ரஷ்யா – உக்ரைன் போர் ஆகிய விவகாரங்கள் முதன்மைப் பேசுபொருளாக உருவெடுத்துள்ளன. மாநாட்டை நடத்தும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன், மத்திய கிழக்கில் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள ஆரம்பகட்ட உடன்பாட்டை விரைந்து இறுதிசெய்ய வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் […]

Read More

அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கு உலக நாடுகளின் வரவேற்பு

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்திற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை தளர்த்தத் தயாராக இருப்பதாக பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. அமெரிக்கா – ஈரான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கட்டார் பிரதமர் வரவேற்றதுடன், அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளுக்கும் தனது முழுமையான ஆதரவை உறுதியளித்துள்ளார். இந்த மோதலை […]

Read More

மாகாண சதுரங்கப் போட்டியில் கார்மேல்பற்றிமா தேசிய பாடசாலை மாணவன் ரகு ஜனுகேஷ் இரண்டாம் இடம் (1st Runner -up)

பாடசாலை சதுரங்கச் சங்கத்தின் ஏற்பாட்டில் தெய்யத்தகண்டியில் கடந்த 12, 13 மற்றும் 14.06.2026 ஆகிய தினங்களில் நடைபெற்ற மாகாண சதுரங்கப் போட்டியில், கமு கார்மேல்பற்றிமா தேசிய பாடசாலை சார்பில் பங்கேற்ற மாணவன் ரகு ஜனுகேஷ், 12 வயதிற்குட்பட்டோர் பிரிவில் இரண்டாம் இடம் (1st Runner-up) பெற்று சிறப்பான சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றி, மாணவரின் தனிப்பட்ட திறமையை மட்டுமல்லாது, பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்க்கும் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்துள்ளது. சாதனை படைத்த மாணவன் ரகு ஜனுகேஷ்க்கு […]

Read More

தெற்கு அரசியல்வாதிகள் மீண்டும் இனவாதத்தை தூண்ட முற்படுகின்றனர்!

தெற்கு அரசியல்வாதிகள், மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக இனங்களுக்கு இடையில் குரோதத்தை ஏற்படுத்தும் விதமாக கருத்துக்களை தெரிவிக்கின்றனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் மீண்டும் இனவாதம் தலை தூக்க நாம் அனுமதிக்க மாட்டோம்.வடக்கு பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி மக்களை சந்தோஷமாக சுதந்திரமாக வாழ வைப்போம். எளியோருக்கு ஒரு நீதியும் பிரபலமானவர்களுக்கு ஒரு நீதியும் என இந்த நாட்டில் இல்லை. அனைவருக்கும் பொதுவான நீதியே உண்டு. பொதுமக்கள் பாதுகாப்பு […]

Read More

துறைநீலாவணையில் கரகக் கலை அரங்கேற்று விழா.

செல்லையா பேரின்பராசா . துறைநீலாவணை கண்ணகி கலைக்கழகம்,  யுனைட்டெட் விளையாட்டுக் கழகம்,  மற்றும் கண்ணகி இளைஞர் கழகம் இணைந்து நடாத்திய ” சத்தியவான் சாவித்திரி ” எனும் கரகக் கலைஅரங்கேற்று விழா துறைநீலாவணை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு அருகில் உள்ள திடலில் அமைக்கப்பட்ட களரியில் 13.06.2026 மாலை வெகு சிறப்பாக இடம்பெற்றது. முன்னதாக இவ் விழாவுக்கு அதிதிகளாக அழைக்கப்பட்ட மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் ,  துறைநீலாவணை  மண்ணின் மைந்தர்களான […]

Read More

அம்பாறையில் 69 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவு தினம் 36 வருடங்களின் பின்னர் முதன் முறையாக அனுஷ்ட்டிப்பு!

(  வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை நகரில் பட்டப்பகலில் 1990 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் திகதி  இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்த  69 அப்பாவித் தமிழ் மக்களின் நினைவாக அஞ்சலி நிகழ்வு ஒன்று   (12) வெள்ளிக்கிழமை மாலை புதிய வளத்தாப்பிட்டி  நாவலர் சனசமூக நிலைய மண்டபத்தில் முதன் முறையாக உணர்வு பூர்வமாக  நடைபெற்றது. 36 வருடங்களின் பின்னர் முதன் முறையாக புதிய வளத்தாப்பிட்டி முத்துமாரியம்மன் ஆலய ஏற்பாட்டில் அதன் தலைவரும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான […]

Read More

மாகாண சதுரங்கப் போட்டியில் கார்மேல்பற்றிமா தேசிய பாடசாலை மாணவன் பரமேஸ்வரன் கவிசாந் சம்பியன்!

மாகாண சதுரங்கப் போட்டியில் கார்மேல்பற்றிமா தேசிய பாடசாலை மாணவன் பரமேஸ்வரன் கவிசாந் சம்பியன்! பாடசாலை சதுரங்கச் சங்கத்தின் ஏற்பாட்டில் தெய்யத்தகண்டியில் கடந்த 12, 13 மற்றும் 14.06.2026 ஆகிய தினங்களில் நடைபெற்ற மாகாண சதுரங்கப் போட்டியில், கமு கார்மேல்பற்றிமா தேசிய பாடசாலை சார்பில் பங்கேற்ற மாணவன் பரமேஸ்வரன் கவிசாந் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் சம்பியனாக வென்று சிறப்பிடம் பெற்றுள்ளார். இவரின் இந்தப் பெறுபேறு பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது. சாதனை படைத்த மாணவர் பரமேஸ்வரன் கவிசாநுக்கு மனமார்ந்த […]

Read More

பாண்டிருப்பு நாவலர் அறநெறி பாடசாலைக்கு இசைக்கருவிகள் கொள்வனவுக்கான உதவும் பொற்கரங்கள் நிதி உதவி

பாண்டிருப்பு நாவலர் அறநெறி பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறன் மற்றும் கலைத்திறனை மேம்படுத்தும் நோக்கில், இசைக்கருவிகளை கொள்வனவு செய்வதற்கான நிதி உதவி, உதவும் பொற்கரங்கள் கனடா அமைப்பினால் வழங்கப்பட்டுள்ளது. அறநெறிப்பாடசாலை அதிபர் திரு லக்குணம் அவர்கள் விடுத்திருந்த வேண்டுகோளின் அடிப்படையில், குறித்த நிதி நேற்று (14) பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டது. நிகழ்வில், உதவும் பொற்கரங்கள் அமைப்பின் தாயக இணைப்பாளர் திரு என். சௌவியதாசன், ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு கன. வரதராஜன் மற்றும் […]

Read More

மக்கள் சேவைக்காக அர்ப்பணித்த ஓர் உன்னத சமூக சேவகரை இழந்து விட்டோம்; அப்துல் சமத் மறைவுக்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் அனுதாபம்.!

(அஸ்லம் எஸ்.மௌலானா) நாவிதன்வெளி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் ஏ.கே. அப்துல் சமத் அவர்கள் மக்களுக்கு சேவையாற்றுவதில் எப்போதும் அர்ப்பணிப்புடன் முன்னின்ற ஒரு உன்னத சமூக சேவகவராகத் திகழ்ந்தார் என்று கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத் தலைவர் கலாநிதி ஏ.எம். ஜெமீல் தெரிவித்துள்ளார். நாவிதன்வெளி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் ஏ.கே. அப்துல் சமத் அவர்களின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில்கலாநிதி ஏ.எம். ஜெமீல் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது; சகோதரர் அப்துல் சமத் […]

Read More