இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா(84)இ உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலமானார்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா(84)இ உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலமானார்
இந்துத் திருக்கோயில்களில் நடைபெறும் மகோற்சவங்கள், கும்பாபிஷேகங்கள் மற்றும் விசேட சடங்குகளின் போது கடல், ஆறு, குளம் அல்லது புனித நீர்நிலைகளில் இருந்து தீர்த்தம் எடுத்து வருவது ஒரு தொன்மையான சமய மரபாகும். குறிப்பாக கடற்கரையோரப் பகுதிகளில் அமைந்துள்ள அம்மன், முருகன் மற்றும் சிவன் ஆலயங்களில் கடல் தீர்த்தம் எடுத்து வருதல் மிகுந்த பக்தி உணர்வுடனும் மரியாதையுடனும் மேற்கொள்ளப்படுகிறது. இன்று(10) புதன்கிழமை காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு மகோற்சவம் கடல்நீர் எடுத்து வந்து கதவு […]
34 வருட கல்விச் சேவையை நிறைவு செய்து ஓய்வு பெறும் கல்வியாளர் சாந்தகுமார்! கல்வித் துறையில் 34 ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய கல்வியாளர் சாந்தகுமார் அவர்கள், இன்று (10.06.2026) தனது நீண்டகால கல்விச் சேவையை நிறைவு செய்து ஓய்வு பெறுகின்றார். ஆசிரிய ஆலோசகர் காராளசிங்கம் நேசரெத்தினம் அவர்களின் புதல்வரான சாந்தகுமார் அவர்கள், 1992 ஆம் ஆண்டு உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் ஆரம்பக் கல்வி ஆசிரியராக தனது பணியைத் தொடங்கினார். அங்கு 2004 ஆம் ஆண்டு வரை மாணவர்களின் […]
(அஸ்லம் எஸ்.மௌலானா) சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபித்து, செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் எல்லை நிர்ணயப் பணிகளை பூர்த்தி செய்து, தேர்தலை விரைவாக நடத்துவதற்கான நடவடிக்கைகளையும் துரிதமாக முன்னெடுக்குமாறு உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரட்ன பணிப்புரை விடுத்துள்ளார். சாய்ந்தமருது நகர சபை தொடர்பான விஷேட கலந்துரையாடல் ஒன்று, இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது. தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் ஏற்பாட்டில் அவரது […]
(வி.ரி.சகாதேவராஜா) அரச சேவை ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் ஏற்பாட்டில், அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்றவர்களின் ஒருமைப்பாட்டை மேம்படுத்தவும் அவர்களின் நலன்களை உறுதிப்படுத்தவும் நோக்கமாகக் கொண்ட “ராஜதந்திர ஜெயந்தி” விழாவில் காரைதீவைச் சேர்ந்த ரி.கோணேஸ்வரனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். அரச சேவை ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் அம்பாறை மாவட்ட பொருளாளரும், காரைதீவு பிரதேச செயலாளருமான ரி.கோணேஸ்வரன் ஓய்வுபெற்ற நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தராவார். இந்த பாராட்டு விழா நிகழ்வு கொழும்பு டவர் அரங்கில் அண்மையில் நடைபெற்றது. ஓய்வூதியதாரர்களின் சமூகப் பங்களிப்பை […]
யாருக்காக இந்த புகைபிடித்த மங்கிய வீதி அறிவித்தல் பலகை? வீதி அபிவிருத்தி அதிகாரசபை கவனிக்குமா? ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு பிரதான வீதியில் வெள்ளைப் பாலத்துக்கு அருகில் போடப்பட்டுள்ள வீதி திசை நிர்ணய அறிவிப்பு பலகை புகைபிடித்து மங்கிப் போய் உள்ளது. தூரத்தில் வரும்போதே துல்லியமாக தெரியவேண்டிய இவ் அறிவித்தல் பலகை, இவ்வாறு மங்கி காணப்படுவதால், அம்பாறை மற்றும் அக்கரைப்பற்றுக்கு எந்த திசையால் செல்வதென்பது சாரதிகளுக்கு தெளிவில்லாமல் உள்ளது. இதனால் நெடுந்தூரம் இருந்து வருகின்ற வாகன சாரதிகள் மற்றும் […]
2026 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் 09 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும், 2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் (க.பொ.த. உயர்தர) பரீட்சைகள் ஓகஸ்ட் 10 ஆம் திகதி முதல் செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகளுக்கான உத்தியோகபூர்வ கால அட்டவணை, விண்ணப்ப நடைமுறைகள் மற்றும் தொடர்புடைய மேலதிக அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. […]
( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு பொலிஸ் நிலைய சிறைக் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்ட ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளார் என்று தெரிகிறது. இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவரே இவ் விதம் தற்கொலை செய்துள்ளார். இம் மரணம் தொடர்பில் பல்வேறு மட்டங்களில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்த 65 வயது மதிக்கத்தக்க 6 பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் காரைதீவு 1 […]
பாறுக் ஷிஹான் கட்டிலில் தன்னுடன் நித்திரை செய்த மகளை கள்ளக்காதலனுடன் இணைந்து பலாத்காரமாக வாயை மூடி துஸ்பிரயோகம் செய்தமைக்காக தாய் மற்றும் கள்ளக்காதலனான சந்தேக நபர் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதியில் 2026.03.24 அன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.அத்துடன் 3 மாத காலமாக தலைமைறைவாகி இருந்த சந்தேக நபர் உட்பட சிறுமியின் தாய் ஆகியோர் கைது செய்யப்பட்டு […]
அருட்சகோதரர் கலாநிதி S.A.I. மத்தியூ அவர்களின் 10வது சிவார்த்த தினம் அனுஷ்டிப்பு அருட்சகோதரர் கலாநிதி S.A.I. மத்தியூ அதிபர் அவர்களின் 10வது சிவார்த்த தினத்தை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வு கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை (08.06.2026) கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்சகோதரர் ச.இ. றெஜினோல்ட் FSC அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் கலந்து கொண்டு மறைந்த அதிபருக்கு அஞ்சலி செலுத்தினர். இதன்போது, கல்வித்துறைக்கும் கல்லூரியின் வளர்ச்சிக்கும் அருட்சகோதரர் கலாநிதி […]